ஏடிஎம்மில் பணம் எடுத்து பணம் வரவில்லை என்று விட்டு சென்ற பணத்தை அதன் பின்னர் ஏடிஎம்_க்கு பணம் எடுக்க வந்து கல்லூரி மாணவன் மீட்டு காவல்துறையிடம் ஒப்படைப்பு.
யசோதை என்பவர் பெட்டவாய்த்தலை செக் போஸ்ட் அருகில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம்மில் சுமார் 12.00 மணியளவில் ATM ல் ரூ 9000 பணம் எடுத்துபார்த்து பணம் வரவில்லை என்று சென்றுவிட்ட நிலையில் அதன் பின்னர் 12:15 மணியளவில் ஏடிஎம் ல் பணம் எடுக்க வந்த கல்லூரி மாணவன் ஏற்கனவே அதிலிருந்த ரூபாய்.9000 த்தை கண்டு ஏடிஎம் அருகில் இருந்த பெட்டவாய்த்தலை செக் போஸ்டில் காவல்துறையினரிடம் ஒப்படைத்து
இந்த பணம் அங்கு இருந்ததாக பணத்தை ஒப்படைத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார், பின்னர் செக் போஸ்டில் உள்ள சிசிடி கேமரா மூலம் ஆய்வு செய்து ஒப்படைத்த காவலர்கள் தனிப்பிரிவு காவலர் முத்து.
செக் போஸ்ட் காவலர் செல்வமணி பணம் காணாமல் போன பெண்மணி பெட்டவாய்த்தலை தேவஸ்தானம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதை அறிந்து அந்த நபரை அழைத்து பணம் காணாமல் போனதை உறுதி செய்துவிட்டு பணம் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments