திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே துவரங்குறிச்சியில் வனப்பகுதிகள் அதிக அளவில் உள்ளன. இங்கு உள்ள மழைப் பகுதியில் அதிக அளவில் காட்டெருமை,புள்ளிமான், முயல்,மலைப்பாம்பு போன்ற மலைவாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.
இங்கு வனப்பகுதியை ஒட்டி திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை உள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் அதிக அளவில் போக்குவரத்து உள்ளதால் மலைவாழ் உயிரினங்கள் இரவு நேரங்களில் இரை தேடி நிலப் பகுதிகளுக்கு வரும் போது எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளாகின்றன
இந்த நிலையில் அதிகாலை புள்ளி மான்கள் திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை செவந்தாம்பட்டி பிரிவு சாலை அருகே சாலையை கடக்கும் போது அவ்வழியே சென்ற வாகனம் மோதியதில் இரண்டு வயது மதிக்கத்தக்க ஆண் மான் ஒன்று இரண்டு பின்னங்கால்களும் பலத்த காயமடைந்து சாலையில் கிடந்தது. இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று புள்ளி மானை மீட்டு முதல் உதவி சிகிச்சை அளித்தனர்
பின்னர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments