காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையினால் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டியதன் காரணமாக மேட்டூர் அணையிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக முக்கொம்பு மேலணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் இன்று 27.07.2025 காலை 11.00 மணி முதல் தண்ணீர் திறக்கப்பட உள்ளது. மேலும் பருவமழை காலம் என்பதனாலும் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவில் இருப்பதனாலும் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்தினை பெருத்து எந்த நேரத்திலும் முக்கொம்பு மேலணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில்

திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கவோ அல்லது குறையவோ கூடும் என்பதனால் பருவமழை காலம் முடிவடையும் வரை கொள்ளிட கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படியும் மேலும் சலவை தொழிலாளர்கள் தங்களது உடமைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும் மேலும் கொள்ளிடம் ஆற்றில் குளிக்கவோ,

துணிதுவைக்கவோ, கால்நடைகளை கொள்ளிடம் ஆற்றில் ஓட்டிச்செல்லவோ வேண்டாம் என நீர்வளத்துறையின் மூலம் அறிவுறுத்தப்படுகிறது தெரிவிக்கப்பட்டுள்ளது



Comments