Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு- உதவிஆய்வாளர்,2-காவலர்களை பணிநீக்கம் செய்த டி.ஐ.ஜி

ஒரு காவலர் போதை பொருள் வழக்கில் கைதாகி குண்ட த் தடுப்பு காவலில் மத்திய சிறையில் உள்ளார் அவர் மீது விசாரணை நடத்தி விரைவில் தண்டனை வழங்கப்படும் என தகவல் தெரிவித்துள்ளார்.

திருச்சி ஜீயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முக்கொம்பு சுற்றுலா தளத்தில் கடந்த 04.10.2023 அன்று மாலை எவ்வித அனுமதியோ, விடுப்போ உயரதிகாரிகளுக்கு எவ்வித தகவலும் சொல்லாமல் TN55-BC-6633 Honda சிவப்பு கலர் காரில் சாதாரண உடையில் சென்ற ஜீயபுரம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் சசிகுமார், நவல்பட்டு


காவல்நிலையத்தை சேர்ந்த காவலர் 258 பிரசாத், திருவெறும்பூர் பகுதி நெடுஞ்சாலை ரோந்து பணிபுரிந்த முதல் நிலை காவலர் சங்கர் ராஜபாண்டியன், ஜீயபுரம் போக்குவரத்து காவல்நிலைய விட்டோடி காவலர் சித்தார்த்தன் ஆகியோர் முக்கொம்பு பகுதியில் மது அருந்திவிட்டு மதுபோதையில் முக்கொம்பு பகுதியில் உள்ள ஒதுக்கு புறமான இடத்தில் இருந்த இரண்டு காதல் ஜோடிகளை வம்பு இழுத்து உள்ளனர். அதில் ஒரு காதல் ஜோடி இவர்களிடமிருந்து தப்பித்து ஓடிவிட்டதாக தெரிய வருகிறது.

தனிமையில் இருந்த மற்றொரு ஜோடியான 17 வயது சிறுமி அரியமங்கலம், திருச்சியை சேர்ந்தவரும் அவரது காதலர் துவாக்குடியை சேர்ந்த 19 வயது இளைஞர் ஆகியோரை மிரட்டி அடித்து வேறு ஏதாவது குற்ற சம்பவத்தில் ஈடுப்பட்டீர்களா? என்றும் உங்களை விசாரணை செய்ய வேண்டுமென்றும் கேள்வி கேட்டு அந்த இளைஞரை விரட்டி அனுப்பி உள்ளனர்.

சிறுமியை மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை வலுக்கட்டாயமாக மிரட்டி காரில் ஏற்றி உள்ளனர். மதுபோதையில் அத்துமீறி உடலை தொட்டு மிரட்டி பேசி அவரின் செல்போன் எண்ணை பெற்று இரவு 8 மணிக்கு நாங்கள் சொல்லும் இடத்திற்கு தனியாக வர வேண்டும் என்று கூறியுள்ளனர். சிறுமியின் காதலனை காவலர் பிரசாத் மற்றும் சித்தார்த் ஆகியோர் அடித்துள்ளார்கள். காரில் உதவி ஆய்வாளர் சசிகுமார் மற்றும் முதல் நிலை காவலர் சங்கர் ராஜபாண்டியன் ஆகியோர் சிறுமியின் உடலை தொட்டு முத்தமிட முயற்சி செய்துள்ளனர்.

பின்பு மாலை 6.00 மணிக்கு மேல் அந்த சிறுமி சத்தம் போடவும் அவரை காரை விட்டு கீழே இறக்கி விட்டதாக தெரிய வருகிறது. அந்த சிறுமி மற்றும் அவரது காதலனும் முக்கொம்பு புறக்காவல் நிலையத்திற்கு ஓடி சென்று அங்கு பணியில் இருந்த உதவி ஆய்வாளர் ஆறுமுகம் மற்றும் சதீஸ்குமார் ஆகியோரிடம் நடந்த சம்பவம் தொடர்பாகவும், அவர்கள் காவல்துறையினர் என்று மிரட்டுவதாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.

பணியில் இருந்த இரண்டு காவலர்களும் சம்பவ இடத்திற்கு செல்ல முயன்ற போது முக்கொம்பு உள் பகுதியிலிருந்து மேற்படி Honda காரில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும் மெயின் ரோடு நோக்கி வந்தவர்களை பணியில் இருந்த காவலர்கள் காரை நிறுத்தி உள்ளே இருந்த உதவி ஆய்வாளர் சசிகுமாரிடம் விசாரித்த போது சசிகுமார் அவர்களிடம் நான் குற்ற சம்பவம் தொடர்பாக அவர்களிடம் விசாரணை செய்தேன் வேறு ஒன்றும் இல்லை என்று கூறியுள்ளார்.

அப்போது பணியில் இருந்தவர்கள் விவரம் கேட்ட போதும் கூட சசிகுமார் மற்றும் காரில் வந்தவர்கள் சரியாக பதிலளிக்காமல் சென்று விட்டதாக தெரியவருகிறது. காவலர்களின் நடத்தை தொடர்பாக கடந்த 05.10.23 அன்று விசாரணை செய்த அப்போதைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் காதலர்களிடம் தவறாக அத்துமீறி நடந்து கொண்ட 3 காவலர்கள் மற்றும் ஒரு உதவி ஆய்வாளர் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்துள்ளார்.

காவலர்களால் பாலியல் தொந்தரவுக்கு உள்ளான சிறுமியின் புகாரின் பேரில் ஜீயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, வழக்கின் எதிரிகளான உதவி ஆய்வாளர் சசிகுமார், காவலர்கள் சங்கர் ராஜ பாண்டியன், பிரசாத் மற்றும் சித்தார்த்தன் ஆகியோர் 05.10.2023-ம் தேதி கைது செய்யப்பட்டு 19.10.2023-ம் தேதி வரை திருச்சி மத்திய சிறையில் அடைப்பு காவல் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பணியிடை நீக்கம் செய்ப்பட்ட உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் மீதான விசாரணையில் மேற்கண்ட உதவி ஆய்வாளர் சசிகுமார், காவலர்கள் சங்கர் ராஜபாண்டியன், சித்தார்த்தன். பிரசாத் ஆகியோர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபனம் ஆனதால் பிழையாளர்களுக்கு எதிராக தமிழ்நாடு காவல் சார்நிலைப் பணிகள் (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு)தண்டனைப்பட்டியில் திருச்சி சரக காவல் துறை துணை தலைவர் வருண்குமார் 30.07.2025 அன்று உதவி ஆய்வாளர் சசிக்குமார். காவலர்கள் பிரசாத் மற்றும் சித்தார்த்தன் ஆகியோருக்கு பணியறவு (Dismissal from service)தண்டனை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் மற்றொரு காவலர் சங்கர் ராஜபாண்டியன் தஞ்சாவூர் மாவட்டம்,மூன்று நபர்களுடன் சேர்ந்து 117 கிலோகிராம் கஞ்சாவை கடத்தியாக கைது செய்யப்பட்டு படி திருச்சி மத்திய சிறையில் தடுப்புக் காவலில் உள்ளார். எனவே பிழையாளர் சங்கராஜபாண்டியன் மீதான விசாரணை மட்டும் நிலுவையில் உள்ளது. விரைவில் விசாரணை முடிக்கப்பட்டு கடுமையான தண்டனை வழங்கப்படும் என டிஐஜி தெரிவித்துள்ளார்.

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *