திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில், திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகத்தின் மூலம், திருச்சி மாநகர் பகுதிகளில் யாசகம் பெறும் நபர்களை மீட்டு மறுவாழ்வு அளிக்க ஏதுவாக களப்பணி ஆய்வு 31.07.2025 அன்று நடைபெற்றது.
ஆய்வில், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், காவல்துறை அலுவலர்கள் மற்றும் வேலா கருணை இல்லம், கங்காரு கருணை இல்லம், டிரீம் இந்தியா, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கலந்து கொண்டனர்.
திருச்சி மாநகரம் மாம்பழச்சாலை, அம்மா மண்டபம், ஸ்ரீரங்கம் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சுமார் 55 யாசகம் பெறும் நபர்கள் (ஆண்கள்-39 மற்றும் பெண்கள்-16) மீட்கப்பட்டனர். மீட்கப்பட்டவர்கள் முதியோர் இல்லங்கள், மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு இல்லங்கள் மற்றும் இரவல் பெறுவோர்களுக்கான மறுவாழ்வு இல்லத்தில் மறுவாழ்வு ஏற்படுத்துவதற்காக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இரவல் பெறுவோர்கள் இருப்பின் 6369103413 என்ற வாட்ஸ்அப் (Whatsapp) எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என்று பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.சரவணன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments