திருச்சிராப்பள்ளி மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக மது பானம் விற்பனை செய்யப்படுவதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக ஊடகங்களில் செய்தி வெளியானது. ஆனால், சட்ட விரோதமாக மது பானம் விற்பனை தொடர்பாக திருச்சி மாவட்டத்தில் தினந்தோறும் குறைந்தது 5 முதல் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.செல்வநாகரத்தினம், அவர்களின் உத்தரவின் பேரில் 5 உட்கோட்டங்களுக்கு தனிதனியாக 5 தனிப்படையினர் நியமித்து சட்ட விரோதமான மதுபானம் விற்பனைக்கு எதிரான தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
இத்தீவிர வேட்டையில் நேற்று (31.07.2025)
சட்ட விரோதமாக மது பானம் விற்பானை செய்தது தொடர்பாக 5 வழக்குகள் (வாத்தலை, சமயபுரம், கொள்ளிடம், உப்பிலியபுரம், துறையூர் மது விலக்கு பிரிவு காவல் நிலையங்கள்) பதிவு செய்யப்பட்டு 6 நபர்களை கைது செய்யப்பட்டனர். அதே போன்று, இன்று (01.08.2025) 15 நபர்களை வெவ்வேறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கைது செய்து அவர்கள் மீது 14 வழக்குகள் (மண்ணச்சநல்லூர், ஜீயபுரம், திருவெறும்பூர், முசிறி, காட்டுப்புத்தூர், கல்லக்குடி, தா.பேட்டை, புலிவலம், துவாக்குடி, காணக்கிளியநல்லூர், புத்தாநத்தம், உப்பிலியபுரம் மற்றும் திருவெறும்பூர் மது விலக்கு பிரிவு காவல் நிலையங்கள்) பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட உள்ளனர்.
மேலும், திருச்சி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை கள்ளதனமாக மது பானம் விற்பனை செய்தது தொடர்பாக 6012 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 6017 நபர்களை திருச்சி மாவட்ட காவல்துறை கைது செய்துள்ளனர்.எனவே, திருச்சி மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக மது பானம் விற்பனை செய்யும் நபர்களில் மீது தொடர்ந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதேபோல் காவல்துறையினருக்கும் சட்ட விரோத மது பானம் விற்பனை செய்யும் நபர்களில் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என குறிப்பாணை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் பற்றிய தகவல் தெரிவிக்க 8939146100 என்ற 24 மணிநேரமும் செயல்படும் மாவட்ட காவல் அலுவலக உதவி எண்ணை அழைக்கலாம் என திருச்சி மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments