கம்பரசம்பேட்டை கலெக்டர் வெல்-II நீரேற்று நிலையத்திலிருந்து செல்லும் குடிநீர் குழாய் குடமுருட்டி பாலம் அருகே உடைப்பு ஏற்பட்டதால் அதனை சரி செய்யும் பணி தற்போது நடைபெற்று வருவதால், மேற்கண்ட நீரேற்று நிலையத்திலிருந்து திருவறும்பூர், வள்ளுவர் நகர், எல்லக்குடி, ஆலத்தூர், புகழ் நகர்,

காவேரி நகர், பாரி நகர், சந்தோஷ் நகர் ,கணேஷ் நகர், அம்பேத்கர் நகர் மற்றும் கீழகல்கண்டார் கோட்டை (பழையது) ஆகிய மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கு வழங்கப்படும் குடிநீர் விநியோகம் 05.08.2025 ஒருநாள் இருக்காது.

06.08.2025 அன்று முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும். குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் அவர்களால் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments