மிலாடி நபியை முன்னிட்டு, திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளும் அதனுடன் இணைந்திருக்கும் மதுபானக்கூடங்களும், மனமகிழ் மன்றம், ஹோட்டல் மற்றும் பார்களில் மதுபானங்கள் விற்பனை செய்ய மாவட்ட ஆட்சியர் சரவணன் தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.
சட்ட விரோத மதுபான விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆட்சியர் எச்சரித்திருந்தார்.திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் கடையை வெளிப்புறம் பூட்டிவிட்டு உள்ளே மதுபானக்கூடம் மூலம் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தனர். சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த மதுபான விற்பனையடுத்து போலீசார் அதிரடியாக பூட்டை உடைத்து உள்ளே புகுந்து சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டிருந்த இருவரை கைது செய்தனர்.
சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதற்காக தனியே அடுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 150 க்கும் மேற்பட்ட மதுபான பாட்டில்களையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments