திருச்சியில், ஓமேகா ஹெல்த்கேர் நிறுவனத்தின் உதவியுடன், கடந்த மூன்று ஆண்டுகளாக இளைஞர்களுக்கான இலவச திறன் பயிற்சி [Data Entry, Tally, DTP, Basic Computer and GDA along with English Communication] மற்றும் வேலைவாய்ப்பு உதவியினை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றி வருகிறோம்.
எங்கள் முயற்சிகள் வெற்றிகரமாக முன்னேறி வரும் நிலையில், அதைத்தொடர்ந்து இந்த திட்டத்தின் ஐந்தாவது பட்டமளிப்பு விழாவில் 541-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த பட்டமளிப்பு விழா ஒமேகா சென்டர் ஆப் ஹோப் திறன் பயிற்சி மையம், யுகேடி மலை, வயலூர் பிரதான சாலையில் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்குவதற்காக Mr. Narayanan V [Senior Vice President & Head, Resource Management] Omega Healthcare Management Services Pvt. Ltd., அவர்கள் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். இந்த நிகழ்ச்சி, இளைஞர்களுக்கு எதிர்கால முன்னேற்றத்திற்கு பெரிதும் துணை புரியும் என்று நாங்கள் நம்புகிறோம்.
எங்கள் நிகழ்ச்சியினை உங்கள் பகுதியில் வெளியிட்டால், அது எங்களுக்கு பெருமையாக இருக்கும்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision
Comments