திருச்சி மாநகரம், எடமலைப்பட்டிபுதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பஞ்சப்பூரில் புதியதாக கட்டப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள முத்தமிழ் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள புறக்காவல் நிலையத்தை (Police Out Post) மாண்புமிகு நகர்ப்புற நிர்வாகத்துறை வளர்ச்சி அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்களும், திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.ந.காமினி, இ.கா.ப அவர்களும், திருச்சி மாவட்ட ஆட்சியர் திரு.சரவணகுமார், இ.ஆ.ப., அவர்களும், வணக்கத்திற்குரிய திருச்சி மாநகர மேயர் திரு.அன்பழகன் அவர்களும் குத்துவிளக்கேற்றி புறக்காவல் நிலையத்தை இன்று 05.09.2025-ந்தேதி திறந்து வைத்தனர்.
மேற்கண்ட புறக்காவல் நிலையத்தில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவை சேர்ந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் பணியமர்த்தப்பட்டு, முத்தமிழ் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள் என திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.ந.காமினி, இ.கா.ப அவர்கள் தெரிவித்தார்கள்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision
Comments