சென்னை: தமிழகத்தில் கட்டணமில்லா அவசர மருத்துவ சேவைகளை வழங்கும் 108 ஆம்புலன்ஸ் சேவை, ஓட்டுநர்கள் மற்றும் அவசரகால மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தவுள்ளது. EMRI GREEN HEALTH SERVICES என்ற நிறுவனத்துடன் இணைந்து தமிழ்நாடு சுகாதாரத் திட்டத்தின் கீழ் இந்த சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பணியிட விவரங்கள்:
* பணிபுரியும் இடம்: தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் நியமனம் செய்யப்படலாம்.
* பணி நேரம்: 12 மணி நேர ஷிப்ட் முறையில் (பகல்/இரவு) பணிபுரிய வேண்டும்.
ஓட்டுநருக்கான தகுதிகள்:
* கல்வித்தகுதி: 10-ஆம் வகுப்பு தேர்ச்சி.
* வயது: நேர்முகத் தேர்வு அன்று 24 வயதுக்கு மேலும் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
* உயரம்: குறைந்தது 162.5 செ.மீ.
* ஓட்டுநர் உரிமம்: இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் பேட்ஜ் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
* அனுபவம்: இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று குறைந்தது 3 ஆண்டுகள் மற்றும் பேட்ஜ் உரிமம் பெற்று குறைந்தது 1 ஆண்டு அனுபவம் அவசியம்.
* சம்பளம்: மாதம் ரூ.21,120/- (மொத்த ஊதியம்).
மருத்துவ உதவியாளருக்கான தகுதிகள்:
* கல்வித்தகுதி:
* B.Sc. நர்சிங், GNM அல்லது ANM.
* DMLT (12-ஆம் வகுப்புக்குப் பிறகு 2 ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்).
* Life Science பட்டம் பெற்றவர்கள் (B.Sc. Zoology, Botany, Bio chemistry, Microbiology, Bio technology).
* வயது: குறைந்தது 19 வயது.
* சம்பளம்: மாதம் ரூ.21,320/- மற்றும் இதர சலுகைகள் உண்டு.
தேர்வு முறை:
* ஓட்டுநர்கள்: எழுத்துத் தேர்வு, தொழில்நுட்பத் தேர்வு, மனிதவளத் துறை நேர்காணல், கண் பார்வை மற்றும் மருத்துவத் தேர்வு, சாலை விதிகளுக்கான தேர்வு.
* மருத்துவ உதவியாளர்கள்: எழுத்துத் தேர்வு, மருத்துவ நேர்காணல், மனிதவளத் துறை நேர்காணல்.
தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு முழுமையான பயிற்சி அளிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு 044-28888060, 75, 77 என்ற தொலைபேசி எண்களை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision
Comments