திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் திருவெறும்பூர் துவாக்குடியில் உள்ள சுங்கச்சாவடி அருகேபாய்லர் தயாரிப்புக்கு தேவையான உதிரி பாகம் ஏற்றிச் சென்ற ஐந்து டன் எடை கொண்ட இரும்புகீழே நழுவி விழுந்தது அதிர்ஷ்டவசமாக யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
திருவெறும்பூர் துவாக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது இந்த தொழிற்சாலைகள் அனைத்தும் பெல் பாய்லர் ஆலை மூலம் உதிரி பாகங்களை செய்வதற்கு ஒப்பந்தங்கள் பெற்று கொதிகலன் பாய்லர் ஆலைகளுக்கு பயன்படும் உதிரி பாகங்களை செய்து வருகிறது
இந்நிலையில் துவாக்குடியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் நேற்று பாய்லர் ஆலைக்கு தேவையான உதிரி பாகங்களை வெப்பமிடுதல் செய்வதற்காக துவாக்குடி அருகே உள்ள அசூரில் இயங்கி வரும் மற்றொரு தொழிற்சாலைக்கு ட்ரைலர் லாரியில் ஏற்றிக்கொண்டு சென்ற டிரைலர் துவாக்குடி சுங்க சாவடியை கடந்து செல்வதற்கு முன்பு துவாக்குடி போக்குவரத்து காவல்துறையினரால் வைத்திருக்கும் தடுப்பு இரும்பு பலகையில் எதிர்பாராதவிதமாக மோதியதில் டிரைலர் லாரியில் ஏற்றி சென்ற சுமார் ஐந்து டன் எடை உள்ள (காலம் பாக்ஸ்) இரும்பு உதிரி பாகங்கள் கீழே விழுந்தது
அதிர்ஷ்டவசமாக அப்போது எந்த ஒரு வாகனங்களும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது .
இச்சம்பவம் பற்றி துவாக்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்ததும்
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இது குறித்து விசாரணை செய்து கீழே விழுந்த ஐந்து டன் எடையுள்ள இரும்பு பொருட்களை அப்புறப்படுத்தினர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision
Comments