திருச்சியை சேர்ந்த சுவேதா என்ற பெண் பஜாஜ் நிறுவனத்தில் கடன் பெற்றிருந்தார். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு அவர் மரணமடைந்துள்ளார். இதனை அடுத்து இன்று பஜாஜ் நிறுவனத்தின் கலெக்ஷன் ஏஜென்ட் ஒருவர், சுவேதாவின் வீட்டிற்கு வந்து குடும்பத்தினரிடம் பணம் கேட்டுள்ளார்.
அப்போது, குடும்பத்தினர் கடன் வாங்கியவர் மரணமடைந்து விட்டார் என்று தெரிவித்தும், அந்த கலெக்ஷன் அதிகாரி எனக்கு அவை எதுவும் தெரியாது, பணம் வேண்டும்; இல்லையென்றால் இந்த இடத்தை விட்டு நகரமாட்டேன் என்று மாலை 5:00 மணி வரை பணம் கேட்டு வற்புறுத்தியுள்ளார்.
பின்னர் அவர் தனது மேலாளரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது. மேலாளர் கூட “எங்களுக்கு காரணம் எதுவும் தெரியாது, உடனடியாக பணம் கொடுக்க வேண்டும்; இல்லையெனில் குழுவில் உள்ள அனைவருக்கும் ஓடி (OD) போடுவோம், எங்கள் அதிகாரிகளை கூட்டி வந்து பணம் வசூல் செய்வோம்” இன்று மிரட்டியதாக தகவல் தெரிவிக்கின்றன.
தங்கள் சகோதரி மறைந்துள்ள நிலையில், இவ்வாறு வரும் மிரட்டி இருப்பது குடும்பத்தினருக்கு மிகுந்த மனவேதனையை மனவேதனை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் ஐயா சிவ சிவ அவர்களும் குழுவில் உள்ள மற்ற அதிகாரிகளும் உதவி செய்யுமாறு தாழ்மையுடன் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments