தவெக தலைமையகம் சார்பில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. செப்டம்பர் 13 முதல் டிசம்பர் 20 வரை தமிழகத்தின் பல மாவட்டங்களில் இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
முதல் கட்டமாக செப்டம்பர் 13-ஆம் தேதி திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து செப்டம்பர் 20-ஆம் தேதி நாகப்பட்டினம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, செப்டம்பர் 27-ஆம் தேதி திருவள்ளூர், வட சென்னை ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது.
“இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் பொதுமக்கள் கூடுவதற்கான வாய்ப்பு இருப்பதால் இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடக்கும் இடங்களில் போக்குவரத்து முறைப்படுத்தி தேவையான பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறார் என்.ஆனந்த், பொதுச்செயலாளர், தலைமை நிலைய செயலகம் அவர்கள்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
Comments