ஆழத்துடையான்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு விடுமுறை அளித்து இன்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது, பள்ளிக்கு விடுமுறை அளித்து நடைபெறுவது அப்பகுதி மக்களிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆழத்துடையான் பட்டி நூற்றாண்டு விழா கண்ட ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு விடுமுறை அளித்து இன்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகம் நடைபெற்ற வருகிறது, கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் திமுக அரசின் சார்பில் நடைபெறும் திட்டம் பள்ளி விடுமுறை அளித்து நடைபெறுவது அப்பகுதி மக்களிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது,
உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடத்துவதற்கு அரசு பல்வேறு நிலைகளில் நிதி ஒதுக்கீடு செய்து கிராம மக்கள் பயன்பெறும் வகையில் கிராமங்களுக்கே சென்று அவர்களின் குறைகள் குறித்து பல்வேறு மனுக்களை பெற்று 46 நாட்களில் நிறைவேற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது,
தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து செயல்படுத்தும் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு விடுமுறை அளித்து அப்பகுதி மாணவ, மாணவிகள் கல்வி தரம் பாதிக்கும் வகையில் நிகழ்ச்சி நடைபெறுவது அப்பகுதி மக்கள் பெரும் குற்றச்சாட்டாக கூறுகின்றனர்,
இதுகுறித்து வட்டார கல்வி அலுவலருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டால் அவர் தொலைபேசியை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments