திருச்சிராப்பள்ளி மாவட்டம். வளநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி எதிரே ஜெராக்ஸ் கடை நடத்தி வரும் சண்முகசுந்தரம் 51/19 த.பெ சுப்பிரமணியன். சிவன்கோவில் தெரு, கோவில்பட்டி, மருங்காபுரி என்பவர் தனது ஜெராக்ஸ் கடைக்கு வரும் பள்ளி சிறுமிகளிடம் பாலியல் நோக்கங்களைத் தூண்டும் நோக்கில் பேசியும்,
அவர்களிடம் தகாத முறையில் நடந்துகொண்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிய வந்ததன்பேரில் கோவில்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஸ்ரீதர் 55/19 த.பெ கோபாலகிருஷ்ணன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் 14.12.20219 அன்று வளநாடு காவல் நிலைய குற்ற எண்.155/19, U/S 9(I) (m) r/w 10 of pocso Act. -6ôi ng வழக்கு பதிவு செய்யப்பட்டு மேற்படி எதிரியான சண்முகசுந்தரம் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.
2. இவ்வழக்கு விசாரணையானது திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பு வழக்கறிஞராக திருமதி. சுமதி ஆஜராகி வாதிட்டு வந்த நிலையில் இன்று (09.09.2025) திருச்சி மகிளா நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி திருமதி. சண்முக பிரியா அவர்கள் எதிரி சண்முகசுந்தரம் என்பவருக்கு ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூபாய். 60,000-ம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
3. இவ்வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்தமைக்காக வளநாடு காவல் நிலைய நீதிமன்ற முதல்நிலை காவலர் 541 பாலசுப்பிரமணி என்பவரை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப அவர்கள் வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள்.
மேலும் திருச்சிராப்பள்ளி மாவட்டம், முசிறி காவல் உட்கோட்டம் ஜம்புநாதபுரம் காவல் நிலைய குற்ற எண்.108/22, U/s 294(b), 323, 324, 506(ii) IPC-ன் படி அடிதடி வழக்கின் எதிரிகளான எதிரி-1 தினேஷ் 22/22, த.பெ மூக்கன், பொன்னுசங்கம்பட்டி, துறையூர் மற்றும் எதிரி-2 முகேஷ். பொன்னுசங்கம்பட்டி, துறையூர் ஆகியோருக்கு இன்று (09.09.2025) கனம் குற்றவியல் நீதித்துறை நடுவர் முசிறி அவர்கள் இரண்டு மாத சிறை தண்டனை மற்றும் ரூ.2000-ம் அபராதம் வழங்கியும், மேலும் இலால்குடி காவல் நிலைய குற்ற எண். 356/18, U/s 3(1) of TNPPDL Act- வழக்கில் பொது சொத்தை சேதபடுத்தியதற்காக எதிரி செல்வம் த.பெ நாகையன். நாகம்மையார் தெரு. லால்குடி என்பவருக்கு. இன்று (09.09.2025) லால்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் அவர்கள் அபராதம் வழங்கியும் தீர்ப்பளித்துள்ளார்கள்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision
Comments