தமிழக முதல்வர் சென்னையில் இருக்கும் கிளாம்பாக்கத்தில் பாகுபாடு இல்லாமல் அனைத்து சங்கங்களுக்கும் சரிசமமாக ஆட்டோ ஸ்டாண்ட் அமைத்துக் கொள்ள ஏற்பாடு செய்து கொடுத்திருந்தார். மேலும் தமிழக முதல்வர் அவர்கள் நடுநிலையாக இருக்க வேண்டும் என்று உத்தரவும் பிறப்பித்துள்ளார். ஆனால் திருச்சியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் ஒரு தலை பட்சமாக செயல்பட்டு முதல்வரின் உத்தரவை புறக்கணித்து ஆட்டோ தொழிலாளர்களுக்குள் மோதல் போக்கை ஏற்படுத்துவதை, இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கம் கண்டிக்கிறது.
திருச்சி மாநகர் பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையத்தில், ஆட்டோ ஸ்டாண்டு அமைப்பது சம்பந்தமாக கடந்த 01/09/25 அன்று திருச்சி மேற்கு தாசில்தார், பொன்மலை மண்டல் உதவிய ஆணையர், போக்குவரத்து யூவீநு. சட்டம் மற்றும் ஒழுங்கு உதவி ஆணையர் ஆகியோர் பங்கேற்ற அமைதி கூட்டத்தில், அனைத்து ஆட்டோ சங்கங்களும் கலந்து கொண்டன. இந்தக் கூட்டத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு சார்ந்தவர்களுக்கு சாதகமான முடிவுகளை அறிவித்தன் அடிப்படையில், இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம். மேற்கண்ட அமைதி கூட்டத்தை புறக்கணித்து செய்து வெளிநடப்பு செய்தது.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகள், திமுக கூட்டணி கட்சிகளுக்கு சாதகமாக செயல்பட வேண்டும் என்பதை ஏற்கனவே முடிவு செய்துவிட்டு கண்துடைப்பிற்காக அமைதி கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளனர். மேற்கண்ட பேருந்து நிலையத்தில் 207 ஆட்டோக்களை நிறுத்த அனுமதி அளித்துள்ளார்கள். இதில் CITU சங்கத்திற்கு 51ஆட்டோக்கள், தொமுச சங்கத்திற்கு 50 ஆட்டோக்கள், AITUC சங்கத்திற்கு 36 ஆட்டோக்கள். மகஇக சங்கத்திற்கு 12 ஆட்டோக்கள் என திமுக கூட்டணி கட்சிகளுக்கு மட்டும் 149 ஆட்டோக்கள் நிறுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 58 ஆட்டோக்களை பல்வேறு சங்கங்களுக்கு அளித்துள்ளனர். இது போன்ற பாகுபாடான செயல் கண்டிக்கத்தக்கதாகும். மேற்கண்ட முடிவிற்கு சாதகமானவர்கள் கையெழுத்திட்ட போதும் இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கம் இதில் கையெழுத்து இடவில்லை.
பஸ் நிலையம் என்பது அனைவருக்கும் சொந்தமான பொது இடமாகும். இதில் கட்சி பாகுபாடுடன் இடம் ஒதுக்குவதும், தொழிலாளர்களுக்குள் பிளவுகளை ஏற்படுவதுவதையும், இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.
மாவட்ட நிர்வாகம் அனைத்து சங்கங்களையும் சரிசமமாக நடத்துவதுடன், அனைத்து சங்கங்களுக்கும் சரிசமமான இடத்தை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision
Comments