Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி ஐயப்ப நகரில் புதிய நூலகத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக திருச்சிராப்பள்ளி மாவட்டம் கேகே நகர், ஐயப்ப நகரில் கூடுதலாக கட்டப்பட்டுள்ள புதிய நூலக கட்டிடத்தை இன்று (26.09.2025) திறந்து வைத்ததை தொடர்ந்து திருச்சிராப்பள்ளி ஐயப்பா நகரில் நடைபெற்ற விழா நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன், அவர்கள் பங்கேற்று குத்துவிளக்கேற்றி வைத்து நூலக கட்டட வளாகத்தை பார்வையிட்டார்.
தமிழ்நாட்டில் உள்ள பொது நூலகங்கள் மாநிலம் முழுவதும் கல்வி, எழுத்தறிவு மற்றும் அறிவுப் பரவலை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகிப்பதோடு, பெரும் எண்ணிக்கையிலான நூல்கள், பருவ இதழ்கள் மற்றும் மின் வளங்களைக் கொண்டு அனைத்து வயதினரும் வாழ்நாள் முழுவதும் கற்றலுக்கான அணுகக்கூடிய மையங்களாக விளங்குகின்றன. இந்த நூலகங்கள் நகர்ப்புற மற்றும் கிராமப்புற சமூகங்களில் கல்வி மற்றும் தொழில்முறை திறன் மேம்பாட்டை ஊக்குவிக்கின்றன. சென்னை கன்னிமாரா பொது நூலகம், சென்னை – அண்ணா நூற்றாண்டு நூலகம், மதுரை – கலைஞர் நூற்றாண்டு நூலகம், மாவட்ட மைய நூலகங்கள், கிளை நூலகங்கள், ஊர்ப்புற நூலகங்கள், நடமாடும் நூலகங்கள், பகுதிநேர நூலகங்கள், என பொது நூலக இயக்குநரகம் நிர்வகிக்கிறது.
அதனடிப்படையில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பொது நூலக இயக்ககம் சார்பில் புதிதாக கட்டப்பட்ட திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 63-வது வார்டு அய்யப்ப நகர் கிளைநூலகம் இணைப்புக் கட்டிடம் (முதல் தளம்), துறையூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட துறையூரில் முழுநேர கிளை நூலக இணைப்புக் கட்டிடம் மற்றும் முசிறி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தொட்டியம் – கொப்பம்பட்டி ஊர்ப்புற நூலக கட்டிடம் என 3 கட்டடங்கள் ரூ.22 இலட்சம் மதிப்பீட்டில் கட்டடத்திற்கும் மற்றும் தளவாடங்கள், நூல்கள் ஆகியவற்றின் மதிப்பு ரூ.4 இலட்சம் என மொத்தம் தலா ரூ.26 இலட்சம் மதிப்பீட்டில் 3 நூலக கட்டடங்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (26.09.2025) சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் திருச்சிராப்பள்ளி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் எஸ்.இனிகோ இருதயராஜ், மண்டல குழு தலைவர் மு.மதிவாணன், திருச்சிராப்பள்ளி வருவாய் கோட்டாட்சியர் அருள், மாவட்ட நூலக அலுவலர் இரா.சரவணக்குமார், 63-வது வார்டு மாமன்ற உறுப்பினர் பொற்கொடி, அரசுத்துறை அலுவலர்கள், வாசகர் வட்ட உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *