தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திருச்சி மின் பகிர்மான வட்டம் பெருநகரம் /திருச்சி சார்பில் பிரதம மந்திரி சூரிய மின் திட்டம் Seva Parv- வார விழா செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2 வரை கொண்டாடப்படுகின்றது. அதனை முன்னிட்டு நடத்தப்படும் விழிப்புணர்வு முகாம் பற்றிய அறிவிப்பு செய்தி குறிப்பு பின்வருமாறு.
திருச்சியில் வரும் திங்கட்கிழமை 29.09.2025) சோலார் மின் இணைப்பு முகாம் நடைபெறுகிறது.
பிரதம மந்திரியின் சூரிய வீடு இலவச மின்சார திட்டத்தின் மூலம் வீட்டு மின் இணைப்புகளில் சோலார் மின் இணைப்பாக மாற்றம் செய்வது தொடர்பான முகாம் வரும் திங்கட்கிழமை (29.09.2025) காலை 10.30 மணி முதல் மதியம் 01.00 மணி வரை மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் திருச்சி மின் பகிர்மான வட்டம் / பெருநகரம் மன்னார்புரம் திருச்சியில் நடைபெறுகிறது.
திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர்கள் பயன்பெறும் வகையில் பிரதம மந்திரி சூரிய வீடு இலவச மின்சார திட்டத்தின் மூலமாக முகாமில் பிரதம மந்திரி சூரிய மின் தகடுகள் (வீடு
அமைக்க உடனடியாக கடன் வழங்கப்படுவது தொடர்பாக விரிவான விபரங்கள் வழங்க வங்கி முகவர்கள் பங்கேற்கின்றனர்.
இதில் சோலார் சூரிய நாடுகள் அமைக்கும் தொழில் நிறுவனங்கனைச் சார்ந்த முகவர்கள் பங்கேற்கின்றனர். மேலும் சோலார் மின் இணைப்புகள் தொடர்பாகவும் மற்றும் அரசு மானியம் பெறுவது தொடர்பாகவும் மின் வாரிய பொறியாளர்கள் விளக்கம் அளிக்க உள்ளனர்.
எனவே மின் நுகர்வோர்கள் முகாமில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு மின்வாரிய மேற்பார்வை பொறியாளர், திருச்சி மின்பகிர்மான வட்டம்/ பெருநகரம், திருமதி.S. செந்தாமரை அவர்கள் தெரிவித்துள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision
Comments