தெய்வீக அருளாசியுடன், இந்திரா கணேசன் கல்விக் குழுமத்தின் தலைமையில், 26.09.2025 அன்று புனிதமான மூன்றாம் ஆண்டு 108 குத்துவிளக்கு பூஜை, நவராத்திரி திருவிழாவை ஒட்டி, ஆன்மிகத் தெளிவை ஏற்படுத்தும் விதமாக சிறப்பாக நடைபெற்றது.
இந்நன்னிகழ்வுக்கு குழும செயலாளர் ஜி. இராஜசேகரன் அவர்கள், இயக்குநர் டாக்டர் ஜி. பாலகிருஷ்ணன் அவர்கள், பதிவாளர் டாக்டர் எம். அனுசுயா அவர்கள் வழிகாட்டியாக இருந்தனர்.
விநாயகர் பூஜையுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சி, குத்துவிளக்கு பூஜையுடன் ஆன்மீக மகத்துவம் பெற்றது. பின் லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் இனிமையுடன் நடைபெற்று, அமைதி, ஒற்றுமை மற்றும் செழிப்பு அனைவருக்கும் அருளப்பெற வேண்டி சிறப்பாக அர்ச்சிக்கப்பட்டது.
இந்திரா கணேசன் கல்விக் குழுமத்தின் கீழ் செயல்படும் சித்த மருத்துவக் கல்லூரி, இயற்கை மருத்துவம் மற்றும் யோக அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி, இணை அறிவியல் கல்லூரி, இயன்முறை சிகிச்சை கல்லூரி, செவிலியர் கல்லூரி, மருந்தியல் கல்லூரி, கல்வியியல் கல்லூரி, ஹெல்த் இன்ஸ்பெக்டர் கல்லூரி,மற்றும் கலை அறிவியல் கல்லூரி ஆகியவற்றின், முதல்வர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் தீவிர பக்தியுடன் கலந்து கொண்டு, இறைவனின் அருளைப் பெற்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments