Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

கரூர் விபத்து: 30க்கும் மேற்பட்டோர் பலி – இழப்பீடு உயர்த்த வேண்டும் என திருமாவளவன் கோரிக்கை

கரூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற விஜயின் பரப்பரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ஆறு குழந்தைகள் உட்பட சுமார் 30க்கும் மேற்பட்டோர் பலியாகினர். சிகிச்சை உள்ளவர்களுக்கு, இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவிக்கவும்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சித் தமிழர் முனைவர் தொல்.திருமாவளவன் சென்னையில் இருந்து விமான மூலம் திருச்சி வந்து அடைந்தார்.விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் தமிழகத்தில் நடைபெற ஒரு பெரும் துயரம் கரூரில் நடந்துள்ளது.

தலைவர் பிரச்சாரம் பண்ணும் போது லட்சக்கணத்தை தொண்டர்கள் கூடுவார்கள். 39 பேர் இறந்த அவலம் நடந்துள்ளது இது இந்திய அளவில் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக அரசு 10 லட்சம் இழப்பீடுஅந்தத் தொகை 50 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும்.

நெருசலில் சிக்கி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு அரசு உயர் சிகிச்சை வழங்க வேண்டும்நள்ளிரவு வேளையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களது துயரத்தில் ஆறுதல் கூறியிருப்பது அவர்களுக்கும் நம்மை போன்ற அனைவருக்கும் ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

எல்லா மாநிலங்கள் கதாநாயகன் உண்டு தமிழகத்தில் திரை கவர்ச்சி என்பது ஒரு மோகமாக மாறியது உள்ளது. சினிமா மோகத்தில் தமிழக மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளார்கள் என்பது அது பார்க்க முடிகிறது.

இது அரசியல் தலைவரை காண்பதற்கு வந்த கூட்டம் அல்ல ஒரு திரை கதாநாயகனை காண்பதற்கான கூட்டமாகும்.

அரசியலை சினிமா என்பது பலமாநிலங்களிலும் உண்டு ஆனால் தமிழ்நாட்டில் பாதிப்புகளை சந்திக்கும் அளவுக்கு இருப்பது வேதனை அளிக்கிறது.இது குறித்து அருணாஜெகதீசன் தலைமையில் விசாரணை அமைக்கப்பட்டுள்ளது.
விசாரணை செய்த பின்னர் தெரிவிப்பார்கள் இப்போது கருத்து சொல்ல முடியாது.

இது போன்ற பெரும் கூட்டத்தை திரட்டும்போது முன்னணி பொறுப்பாளர்கள் முன்கூட்டியே கணக்கிட்டு அதற்கு ஏற்ப நேரம் கால அளவு தீர்மானிக்க வேண்டும்.
பொது மக்களின் பாதுகாப்பில் விழிப்புணர்வு வேண்டும்.

காவல்துறை மீது தமிழக அரசு மீது குற்றம் சுமத்துவது நடத்தியவர்கள் மீது குற்றம் சுமத்துவது தேவையில்லை என்று கருதுகிறேன்.
ஆறுதல் சொல்வது நமது கடமையாகும். காவல்துறை யாரையும் தடுப்பதில்லை நிபந்தனையுடன் அனுமதி கொடுக்கின்றனர்.

தாமதத்திற்கு இடம் கொடுக்கக் கூடாது. இதற்கு அவர் பொறுப்பெடுக்க வேண்டும் சென்னையில் இருந்து புறப்பட்ட நேரமே தாமதம் ஆகும் முதல் நாளே அவர் நாமக்கல் தங்கி இருக்க வேண்டும் ஒரு மணி நேரம் தாமதம் ஆகலாம். ஏழு மணி நேரம் தாமதமாகுவது என்பது திட்டமிட்டு போகிறார்களா என்று கேள்விக்குறியாகிறது.

பேரணிக்கு செல்வதற்கு நமக்கு முன்னெச்சரிக்க வேண்டும். நாங்கள் கூட்டம் நடத்தும்போது பல்வேறு பாதுகாப்பு குறித்து தெரிவிக்கிறோம்.விஜய் ரசிகன் தங்களது பாதுகாப்பில் கவனமாக விழிப்புணர் இருக்க வேண்டும். செய்தியாளர்கள் சந்திப்புக்கு பின்னர் திருச்சியில் இருந்து சாலை மார்க்கமாக கரூர் சென்றார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *