தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவர் விஜய் நேற்று மூன்றாம் கட்ட பிரச்சார பரப்புரையை நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டத்தில் நடத்தினார் அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 39 நபர் உயிரிழந்தனர்.இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நள்ளிரவு சென்னையில் இருந்து தனி விமான மூலம் திருச்சி வருகை தந்து சாலை மார்க்கமாக கரூர் சென்று அரசு மருத்துவமனையில் உயிரிழந்த உறவினர்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களை நலம் விசாரித்தார்.
மேலும் இந்த கூட்டத்தில் சம்பவம் குறித்து விசாரணை செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிட்டார்
தற்போது நீதிபதி அருணா ஜெகதீசன் சென்னையில் இருந்து விமான மூலம் திருச்சி வந்தார்
தொடர்ந்து திருச்சி விமான நிலையத்திலிருந்து கார் மூலம் சாலை மார்க்கமாக கரூர் புறப்பட்டு செல்கிறார்தொடர்ந்து கரூரில் தவெக கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு சென்று விசாரணையை துவங்க உள்ளார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் எம்.பி கனிமொழி, துரை வைகோ, அருண் நேரு ஆகியோர் சாலை மார்கமாக கரூர் புறப்பட்டு சென்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments