Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

வந்தே மாதரம் பாடலை அவமதித்த ராகுல் காந்தி, சோனியா காந்தியை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

ஐந்தாண்டுகள் கட்சியை நடத்த வேண்டும் என்பதற்காகபாஜகவினர் அண்ணாமலை இதற்கெல்லாம் கண்டனம் தெரிவிக்க மாட்டார் எனவும் குற்றச்சாட்டு

வந்தே மாதரம் பாடலை அவமதித்த காங்கிரஸ் கட்சியையும், சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தியையும் கண்டித்து திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் எதிரில் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

மாவட்டத் தலைவர் ஒண்டிமுத்து தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் பங்கேற்பு

ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியை கண்டித்தும், வந்தே மாதரம் பாடலை அவமதித்ததற்கு காங்கிரஸ் கட்சி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பினார்கள்

இந்தியா பெருமைப்படக்கூடாது என்பதற்காக தான் அவர்கள் வந்தே மாதரம் பாடலை நிறுத்து என கூறியுள்ளார்கள், இரண்டு முறை இதுபோல நடந்துள்ளது என்றும், மல்லிகார்ஜுனா கார்கேவை அமரச் சொல்லி தான் சொன்னமே தவிர வந்தே மாதரத்தை அவமதிக்கவில்லை எனவும் தற்போது காங்கிரஸ் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்தனர்

இந்த நாட்டில் தேசப்பற்று உள்ள கட்சி பாஜக மட்டும் தான் என்பதை இந்த ஆர்ப்பாட்டத்தில் மூலம் தெரிய வருகிறது, மத்த கட்சிகளுக்கு தேசப்பற்று இல்லை அதனால் அவர்கள் எந்த ஒரு கண்டனமும் தெரிவிக்கவில்லை

நேற்றையதினம் மாநில தலைவர் பேசியதற்கு விளக்கம் கொடுப்பவர்கள் இன்றைக்கு எங்கே போனார்கள்? வீ த லீடர்ஸ் அண்ணாமலைக்கு இது எல்லாம் காதில் விழவில்லையா, 5ஆண்டுகள் கட்சிநடத்த தவெக ஆதரவு வேண்டும், இல்லாவிட்டால் ஏதேனும் வழக்கில் உள்ளே தள்ளிவிடுவார்கள் என்ற பயத்தில் பேசமாட்டார், தமிழகத்தில் கற்பழிப்பு, கொலைகுற்றங்கள் எந்த பிரச்சினைக்கும் வாய் திறக்க மாட்டார். தேசத்திற்காக உயிர் கொடுப்பதற்காக இங்கு உள்ளவர்கள் 100 பேரும் தயாராக இருப்பார்கள் அந்த அளவிற்கு பாஜக வளர்த்து உள்ளது, வந்தே மாதரம் பாடலை அவமதித்த இத்தாலி சோனியாவை கைது செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஒண்டிமுத்து கூறுகையில்… தேசபக்தி பாடலை நின்று கேட்க வேண்டும் என்ற அடிப்படை அறிவுகூட இல்லாத நிலையில் உள்ளனர்

அவர்களின் நாட்டின் பிரஜை இல்லை என்பதாலும் இத்தாலி நாட்டவர் என்பதாலும், பொறுத்துக் கொள்ள முடியாததால் கட்சியை வழிநடத்தக் கூடிய கேவலமான தலைவர்கள் இந்த நாட்டில் உள்ளனர் என குற்றம்சாட்டினார்

நயினார் பேசியது ஒன்றும் தவறாக தெரியவில்லை, அண்ணாமலை மற்றும் குஷ்பூ கட்டணம் தெரிவித்து இருக்கிறார்கள், அவரது அமைப்பை கொண்டு செல்வதற்கு எந்த தடையும் இருக்க கூடாது என்பதற்காக பாஜகவை குறை சொல்லி கருங்காலி வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

தமிழக வெற்றிக்கழக அரசு 100 நாட்களைக் கடந்துள்ளது முதல்வர் கணக்கில் புலியாக இருக்கிறார், நிதி அமைச்சர் அதைவிட புலியாக இருக்கிறார், கணக்கை கூட சரிவர சொல்ல தெரியவில்லை. சட்டமன்றத்தை முன்பு ஒளியும் ஒலியும் பார்த்தது போல வீட்டில் உட்கார்ந்து பார்த்துக்கொண்டு ரசித்துக் கொண்டு இருக்கிறோம், காற்றடித்தால் பேப்பர் கோபுரத்தில் உட்கார்ந்து இருப்பது போல இந்த அரசு உட்கார்ந்து இருக்கிறது, இன்னொரு காத்தடித்தால் அது கீழே விழுந்துவிடும் என்றார்.

 

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *