Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

ஒரே நாளில் ₹7.38 லட்சம் அபராதம்: திருச்சி ரயில்வே கோட்டம் சாதனை!

திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் பாலக் ராம் நேகி  வழிகாட்டுதலின் கீழும், திருச்சி முதுநிலை கோட்ட வணிக மேலாளர் பு. வெங்கடராகவன் தலைமையிலும், 14.08.2026 அன்று, திருச்சி கோட்டத்தில் சிறப்பு டிக்கெட் பரிசோதகர்கள் நடத்திய சோதனையில்
டிக்கெட் இன்றி பயணித்த 545 பயணிகளுக்கு ₹4,44,474 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

முன்பதிவில்லா டிக்கெட் வைத்துக் கொண்டு முன்பதிவு பெட்டியில் பயணித்த 396 பயணிகளுக்கு ₹2,84,379 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதல் லக்கேஜ் கொண்டு வந்த 7 பயணிகளிடம் ₹3,180 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இதர விதிமீறல்களுக்காக 5 பயணிகளிடம் ₹6,200 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
மொத்தத்தில் 953 பயணிகளிடம் ₹7,38,233 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

திருச்சி கோட்ட டிக்கெட் பரிசோதனைக் குழுவினரால் ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இதுவரை வசூலிக்கப்பட்டுள்ள அதிகபட்ச அபராதத் தொகை இதுவாகும்
திருச்சி ரயில்வே கோட்ட மக்கள் தொடர்பு அதிகாரி ஜெயந்த் தகவல் தெரிவித்துள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *