திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள புத்தாநத்தம் ஊராட்சியை இரண்டாக பிரித்து புத்தாநத்தம் மற்றும் இடையபட்டி ஊராட்சியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புத்தாநத்தம் ஊராட்சியை இரண்டாக பிரித்தால் பொருளாதார ரீதியாக பாதிப்பு ஏற்படும் எனக்கூறி கிராம பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு கட்ட

போராட்டங்கள் நடத்தியும் ஊராட்சி இரண்டாக பிரிக்கப்பட்டு புதிதாக இடையபட்டி ஊராட்சி உருவாக்கப்பட்ட நிலையில் இன்று நடைபெற்ற முதல் கிராம சபைக் கூட்டத்தைத் அனைத்து கிராமத்தினரும் புறக்கணிப்பதாககூறி அந்த ஊராட்சியைச் சேர்ந்த இடையபட்டி, புங்குருணிபட்டி, வெள்ளையகவுண்டம்பட்டி, கணவாய்பட்டி, குருமலைப்பட்டி, சரளபட்டி, கம்புளியம்பட்டி, அண்ணாநகர், சின்னாகவுண்டம்பட்டி, பாறைப்பட்டி உள்ளிட்ட 18 கிராமமக்களும் ஊரில் பேனர் வைத்தனர். ஆனால் கிராம சபை கூட்டத்திற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்த நிலையில் அதில் கிராமமக்கள் கலந்து கொள்ளாத நிலையில் 15 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments