சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஜீயபுரம்,முக்கொம்பு, திருப்பராய்த்துறை, பெருகமணி மார்க்கமாக பெட்டவாய்த்தலை/குளித்தலை வரை செல்லும் நகர பேருந்துகளின் பிளக்ஸ் பேனர் மூலம் அமைக்கப்பட்டிருந்த கால அட்டவணை கிழிந்து தொங்கிக் கொண்டிருந்தது.
முதல்வரின் முகவரி மூலம் கிழிந்து தொங்கிக் கொண்டிருந்த பேருந்து கால அட்டவணைகளை சரி செய்து தரும்படி பயணிகள் கோரிக்கை வைத்திருந்தனர்.
உடனடியாக நடவடிக்கை எடுத்த திருச்சிராப்பள்ளி மாநகராட்சி நிர்வாகத்தினர் தற்பொழுது பேருந்து கால அட்டவணையை பெயிண்டின் மூலம் நிரந்தரமாக அருகில் உள்ள சுவற்றில் புதுப்பொலிவுடன் எழுதி விட்டனர்.
சிறப்பம்சமாக, குறை தீர்வு மற்றும் நிர்வாக அலுவலர்களின் மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதனால் ஊடனுக்குடன் பயணிகள் தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்பதால் , பயணிகளிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
இதே போல் சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து இயங்கும் அனைத்து வழித்தடங்களுக்கான கால அட்டவணையை வைக்க வேண்டும் என்பது பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision
Comments