திருவெறும்பூர் அருகே உள்ள பத்தலபேட்டை ஊராட்சியில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் அவர்களின் சிரமத்தை போக்கும் வகையில் தமிழக அரசின் நெல் கொள்முதல் நிலையம் அமைத்து 2019 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது இந்த நெல் கொள்முதல் நிலையம் மூலமாக பத்தலபேட்டை ஊராட்சி மற்றும் திருநெடுங்கலம் ஊராட்சியை சேர்ந்த மேல மங்காவனம் கீழ மங்காவனம் தேவராயநேரி ஆகிய கிராம மக்கள் சுமார் 3000 ஏக்கர் பரப்பளவுக்கு மேல் உள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்படும் நெற்களை இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் தான் தாங்கள் வயல் பகுதியில் இருந்து டிராக்டர் மூலம் கொண்டு வந்து இறக்குகின்றனர் இந்நிலையில் இந்த அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் சம்பா சித்திரை கார் ஜூன் குருவை என மூன்று போகமாக இங்கு நெற்பயிர்கள் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாக பெய்த கன மழையில் நெல் கொள்முதல் நிலையம் முழுவதும் நீர் சூழ்ந்தும் மேலும் விவசாயிகள் கொண்டு வரும் நெல் முட்டைகளை பாதுகாப்புக்காக போதிய வசதி இல்லாததால் நெல் முட்டைகள் பிடிக்கப்படாமல் மலையில் நனைந்து முளைக்கட்டும் அபாயம் ஏற்பட்டுள்ளது
மேலும் இப்பகுதி கிராம விவசாயிகள் கூறுகையில் நடவு கூலி அதிகரித்துள்ள நிலையில் உர விலையும் உச்சத்தில் உள்ள நிலையில் விவசாயிகள் நாங்கள் நெல் கொள்முதல் செய்யப்படவில்லை என்றால் என்ன செய்ய முடியும் என்றும் எனவே தமிழக அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மேலும் நடிகர்சங்கத்திற்கு 100 கோடி ரூபாய் ஒதுகும் தமிழக அரசாங்கம் விவசாயிகளுக்கு வாழ்வாதாரமாக இருக்கும்
விவசாயத்திற்கு ஏற்ற நெல் குழுமுதல் நிலையங்களுக்கு செலவழிக்க நிதி ஒதுக்கினால் விவசாயிகளில் வாழ்வாதாரம் காப்பாற்றப்படும் என்று விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments