Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்

திருச்சி தெற்கு மாவட்ட திமுகவின் சார்பாக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டம் திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் SIR கொண்டு வந்துள்ள இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்து நவம்பர் 11ஆம் தேதி அன்று நடைபெறும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தொடர்பான ஆயத்த கூட்டம் மாவட்டக் கழக செயலாளரும் அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் கீழ்கண்ட திர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. S.I.R சீராய்வை தேர்தல் ஆணையம் உடனே கைவிடும்படி தேர்தல் ஆணையத்துக்கு வேண்டுகோள் விடுத்தும் அதனை செவிமடுக்காத ஒன்றிய பா.ஜ.க. அரசின் கைப்பாவையாக மாறி, எதேச்சாதிகாரப் போக்கில் இந்தியத் தேர்தல் ஆணையம், தமிழ்நாட்டில் சிறப்புத் தீவிரவாக்காளர் பட்டியல் சீராய்வு (S.I.R.) கொண்டு வந்துள்ளதை கண்டித்து ‘மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் வருகிற 11-11-2025. அன்று காலை 10:00 மணியளவில், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெரும் திரளாக கலந்து கொள்வது” என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

2026 தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில் பாசிச பாஜக உடன் இணைந்து பொருந்தாத கூட்டணி அமைத்து மக்களை களத்தில் சந்திக்க வரும் அஇஅதிமுகவை திருச்சி தெற்கு மாவட்டத்தில் அமைந்துள்ள மூன்று சட்டமன்ற தொகுதிகளிலும் கூட்டணி கட்சிகளின் பலத்துடன் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்து கழகத்தலைவரை மீண்டும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக அமரச்செய்ய இக்கூட்டம் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றுகிறது.தேர்தல் ஆணையம் தற்போது கொண்டு வந்துள்ள சிறப்பு தீவிர திருத்தம் ஜனநாயகத்தை பாதிக்கும் வகையில் அவசர கோலத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பம் யாருக்கு வழங்கப்படுகிறது விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்துள்ளார்கள் ? என்பதற்கு எந்த அத்தாட்சியும் கிடையாது. எனவே யாரையும் கழிக்கலாம், யாரையும் சேர்க்கலாம் என்ற நிலையில் தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள படிவத்தை படித்தவர்கள் கூட பூர்த்தி செய்ய முடியாத நிலையில் உள்ளது. இதனால் ஏழை எளிய மக்கள், பின்தங்கிய மக்களை கழிப்பதற்காக இந்த சிறப்பு தீவிர திருத்தத்தை கொண்டு வந்துள்ளனர் என கருதும் நிலையில் உள்ளதால் இதை இக்கூட்டம் வன்மையாக கண்டிப்பதுடன் திரும்பப் பெறவும் வலியுறுத்துகிறது.

சிறுபான்மை வாக்குகள் பாஜகவின் எதிர்ப்பு வாக்குகள் ஆகியவற்றை குறிவைத்து நீக்கும் நோக்கோடு தகுதியான வாக்காளர்களை தகுதி அற்றவர்களாகவும் தகுதியற்றவர்களை புதிய வாக்காளர்களாக சேர்க்கும் திட்டத்தோடு ஒன்றிய பாஜக அரசு தனக்கு பாதுகாவலாக தேர்தல் ஆணையத்தை வைத்துக் கொண்டு இதனை செய்திட முயன்று வருவதை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.பீகார் மற்றும் அரியானா ஆகிய மாநிலங்களில் பல லட்சம் வாக்காளர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளது இதற்கும் முறையான பதிலை தேர்தல் ஆணையம் சொல்லவில்லை. உலகில் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள பெரிய நாடான இந்தியாவிற்கு பாசிச பாஜகவால் விடப்பட்ட சவாலை மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் ஒன்று சேர்ந்து முறியடிக்கும் என ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

பீகார் சட்டமன்றத் தேர்தலில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாரத பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் வாழும் பீகாரிகளை தமிழர்கள் துன்புறுத்துவதாக ஒரு அவதூறு பிரச்சாரத்தை மேற்கொண்டு இரு மாநில மக்களிடையே வெறுப்புணர்வை தூண்டும் விதத்தில் பேசிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.இக்கூட்டத்தில் மாநகர கழகச் செயலாளர் மு.மதிவாணன், கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமத், காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த மாமன்ற உறுப்பினர்கள் கோவிந்தராஜ், ரெக்ஸ், மதிமுக வெல்லமண்டி சோமு, தமிழ்மாணிக்கம், வி.சி.க. சக்தி ஆற்றல் அரசு, கனியமுதன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஹபிபுல்ரகுமான், மொய்தீன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ராஜ்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வெற்றி, சிவராசன், மனித நேய மக்கள் கட்சி முகமது ராஜா, பயாஸ், ஆதிதமிழர் பேரவை முருகேசன், மதன் குமார், திராவிட கழகம் ஆரோக்கியராஜ், சேகர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *