திருச்சி துரையூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ச்சியாக நடந்து வந்த இருசக்கர வாகனத் திருட்டுச் சம்பவங்கள் குறித்து உப்பிலியபுரம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையின் அடிப்படையில், ஆங்கில்யத்தைச் சேர்ந்த அஜித் (28), கிரி (20), புத்தனாம்பட்டியைச் சேர்ந்த கோபி (29), மற்றும் சாத்தனூரைச் சேர்ந்த பிரகாஷ் (29) ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்களிடம் இருந்து, திருடப்பட்ட 12 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக உப்பிலியபுரம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தொடர் திருட்டில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டதையடுத்து, அப்பகுதியில் நிலவி வந்த அச்சம் குறைந்துள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments