தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி இல்ல திருமண விழாவில் பங்கேற்க திருச்சிக்கு வருகை தந்துள்ளார். முன்னதாக நேற்று விமான மூலம் சென்னையில் இருந்து வந்த அவர் சுற்றுலா மாளிகையில் வந்து தங்கி ஓய்வெடுத்து வருகிறார்.இன்று காலை ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் இல்ல திருமண விழாவில் பங்கேற்க சாலை மார்க்கமாக
தலைமை தபால் நிலையம் போத்தக்கடை மாநகராட்சி அலுவலக சாலை, எம்ஜிஆர் சிலை ரவுண்டானா திருச்சி தலைமை அரசு மருத்துவமனை வழியாக வயலூர் சாலையில் சாலை மார்க்கமாக முதல்வர் வருகிறார்.

சோமரசன்பேட்டை அருகே உள்ள திடலில் திருமண விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.இதனால் திருச்சி மாநகரில் இரண்டு தனியார் பள்ளிகள் ஒரு அரசு பள்ளி உள்ளிட்டவைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. திருச்சி மாநகராட்சி எதிரே உள்ள தனியார் பள்ளி நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. காலை 8.50 க்கு பள்ளி செயல்பட துவங்க வேண்டிய நிலையில் முதல்வரின் வருகை ஒட்டி காலை 9.50மணிக்கு பள்ளி செயல்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதேபோல் திருமண நிகழ்வு நடைபெறும் சோமரசன்பேட்டை சாலையில் இரண்டு தனியார் பள்ளிகளுக்கும் ஒரு அரசு பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. சாலை முழுவதும் இருபுறமும் வாழை மரம்,கரும்பு,காய், கனிகளால் கட்டப்பட்டு இருபுற கடைகளும் மறைக்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் இன்று கடைகள் திறக்க கூடாது என காவல்துறை தெரிவித்துள்ளத. மேலும் அருகே ஒரு தனியார் மருத்துவமனையும் உள்ளது.சாதாரணமாக திருச்சி வயலூர் செல்லும் சாலை காலை மாலை நேரங்களில் மிகவும் போக்குவரத்து நெரிசல் உடன் காணப்படும்.

அந்த சாலையில் முதல்வர் பயணிக்க இருப்பதால் சாலை இருபுறங்களிலும் காவல்துறையினர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு கடைகள் அடைக்கப்பட்டு போக்குவரத்து மாற்றமும் முதல்வரும் நேரத்தில் மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சோமரசம்பேட்டைக்கு முன்னதாக சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் சாலையின் இரு புறங்களிலும் வாழை மரங்களை வைத்து முதல்வருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது அப்பகுதியில் உள்ள கடைகள் அனைத்தும் மறைத்து அடைக்கப்பட்டுள்ளன.

முதல்வர் திருமண நிகழ்வு கலந்து கொண்டு மீண்டும் இச்சாலையில் திரும்பியவுடன் போக்குவரத்து இயல்பானதாக மாற்றப்படும் கனரக வாகனங்களுக்கு அனுமதி கிடையாது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision






Comments