திருச்சிராப்பள்ளி: அகில இந்திய கட்டுநர்கள் சங்கத்தின் திருச்சிராப்பள்ளி மையம் சார்பில், வரும் டிசம்பர் 26, 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் ‘பில்ட் ராக் 2025’ கட்டுமானப் பொருட்கள் கண்காட்சி பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இக்கண்காட்சியை மாண்புமிகு அமைச்சர் கே.என். நேரு அவர்கள் டிசம்பர் 26-ஆம் தேதி காலை 10:00 மணிக்குத் தொடங்கி வைக்கிறார்.

இந்த கண்காட்சியின் சிறப்பம்சமாக, வெறும் கட்டுமானப் பொருட்கள் மட்டுமின்றி, ஒரு புதிய வீட்டை உருவாக்குவதற்குத் தேவையான அத்தனை சேவைகளும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இது குறித்து கண்காட்சித் தலைவர் Er. குமரன் கூறுகையில், இங்கு வீடு கட்டுவதற்கான சிமெண்ட், இரும்பு முதல் நவீன இன்டீரியர் ஒர்க்ஸ் வரை அனைத்தும் இடம்பெறும். குறிப்பாக, வீடு கட்டத் திட்டமிடுபவர்களுக்குத் தேவையான வங்கி வீட்டுக் கடன் வசதிகள் குறித்த ஆலோசனைகளும், ஸ்டால்களும் அமைக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.

100-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு வரும் நிலையில், முன்னணி நிறுவனங்கள் தங்களின் இடங்களை ஏற்கனவே உறுதி செய்து வருகின்றன. “தற்போது மிகக்குறைந்த எண்ணிக்கையிலான ஸ்டால்கள் மட்டுமே காலியாக உள்ளதால், கட்டுமானத் துறை சார்ந்த நிறுவனங்கள் மற்றும் வணிகர்கள் தங்களின் ஸ்டால்களை விரைந்து முன்பதிவு செய்து கொள்ளுமாறு” கண்காட்சி ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்தக் கண்காட்சிக்கான ஏற்பாடுகளைத் தலைவர் திரு. நசுருதீன், செயலாளர் திரு. ஜெயராமன், பொருளாளர் Er. விஸ்வநாத் மற்றும் கண்காட்சி குழுத் தலைவர் Er. குமரன் தலைமையிலான குழுவினர் சிறப்பாகச் செய்து வருகின்றனர். ஆலோசகர்கள் Er. சரவணன், Er. சுப்ரமணி, திரு. ஜெயந்த் மேத்தா மற்றும் துணைத் தலைவர் திரு. ஜார்ஜ் ராய் ஆகியோர் இந்த மாபெரும் நிகழ்வை ஒருங்கிணைத்து வருகின்றனர்.
கட்டுமானத் துறையின் சமீபத்திய தொழில்நுட்பங்களை அறியவும், ஒரே இடத்தில் வங்கி கடன் முதல் இன்டீரியர் வரை அனைத்தையும் பேசி முடிக்கவும் இந்த ‘பில்ட் ராக் 2025’ ஒரு சிறந்த தளமாக அமையும் என்பதில் ஐயமில்லை.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments