திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு தீவிர திருத்தம் மூலம் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் சரவணன் அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன் வெளியிட்டார்
திருச்சிராப்பள்ளி மாவட்டம்
சிறப்பு தீவிர திருத்தம் 2026 வரைவு வாக்காளர் பட்டியல் 27.10.2025 தேதியின்படி, மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை – 2368967. இதில் ஆண்கள் 1146454 பெண்கள் 1222125 இதர 388.
19.12.2025 தேதியின்படி, மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை – 2037180. இதில் ஆண்கள் – 990215 -156239, பெண்கள் – 1046664 -175461.
கண்டறிய இயலாதவர்கள் 44,276, இடம்பெயர்ந்தோர் 1 லட்சத்து 60 ஆயிரத்து 831, இறப்பு 1 லட்சத்து 16 ஆயிரத்து 756, இரட்டைப்பதிவு 985, இதர 119 மொத்த வாக்காளர்களில் 14.01% நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
எஸ் ஐ ஆருக்கு பிறகு திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளில் நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர்கள் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேருவின் தொகுதி திருச்சி மேற்கு
நீக்கம் செய்யப்பட்டவர்கள் 57 ஆயிரத்து 339 பேரும்,
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஸ் தொகுதி திருவரம்பூர் அதில் நீக்கம் செய்யப்பட்டவர்கள் 39 ஆயிரத்து 983 பேரும்,
திருச்சி மாவட்டத்தில் கிழக்கு தொகுதியில் அதிகபட்சமாக
57 ஆயிரத்து 813 வாக்காளர்கள் எஸ் ஐ ஆர் பணி மூலம் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி மாவட்ட ஒன்பது சட்டமன்ற தொகுதியில் நீக்கம் செய்யப்பட்டவர்கள்: திருச்சி மேற்கு – 57339, திருவெறும்பூர் – 39983,
மணப்பாறை – 31635, ஸ்ரீரங்கம் – 44148, திருச்சி கிழக்கு – 57813, லால்குடி – 19312, மண்ணச்சநல்லூர்- 33672, முசிறி – 21647, துறையூர்- 26238 என எஸ் ஐ ஆர் மூலம் திருச்சி மாவட்டத்தில் 3,31,787 பேர் நீக்கப்பட்டுள்ளனர் திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் தகவல்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments