Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி: 2800 போலீசார் பாதுகாப்பு – மாநகர காவல் ஆணையர் அதிரடி நடவடிக்கை!

அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவானது இந்த ஆண்டு 19.12.2025-ம்தேதி முதல் 29.12.2025-ம்தேதி வரை பகல் பத்து திருவிழாவாகவும், 30.12.2025-ம்தேதி முதல் 08.01.2026ம்தேதி வரை இராப்பத்து திருவிழாவாகவும் நடைபெறுகிறது. 21 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் (சொர்க்கவாசல்) வருகின்ற 30.12.2025-ம்தேதி அதிகாலை 0545 மணிக்கு திறக்கப்படவுள்ளது.

திருச்சி மாநகரின் மிக முக்கியமான விழாவை முன்னிட்டு காவல்துறை சார்பில் பாதுகாப்பு பணிக்காக ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோவில் ரெங்கவிலாஸ் மண்டபம் அருகில் திருச்சி மாநகர காவல்துறை சார்பில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு, இன்று (19.12.2025)-ந்தேதி மாலை 1900 மணிக்கு திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.ந.காமினி, இ.கா.ப., அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. புறக்காவல் நிலையம் திறப்பு விழாவின்போது ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோவில் இந்து அறநிலைய துறை இணை ஆணையர்/செயல் ஆணையர் மற்றும் மாநகர காவல் துணை ஆணையர் வடக்கு மற்றும் தெற்கு, ஸ்ரீரங்கம் சரக உதவி ஆணையர், காவல் அதிகாரிகள், கோவில் ஊழியர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

கடந்த வருடம் சுமார் 2.50 லட்சம் பக்தர்கள் தரிசனத்திற்கு வருகை புரிந்தார்கள். மேலும் இந்த வருடம் சுமார் மூன்று லட்சம் பக்தர்கள் தரிசனத்திற்கு வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வைகுண்ட ஏகாதசி விழாவிற்கு போதுமான பாதுகாப்பு அளிப்பதற்காக உள்ளுர் மற்றும் வெளியூர் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் என சுமார் 2800 பேர் பாதுகாப்பு பணிக்கு பணியமர்த்தப்பட உள்ளார்கள். மேலும் பகல் பத்து மற்றும் இராப்பத்து விழாவின்போது திருச்சி மாநகர காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் 321 பேர் 2 Shift முறையில் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டு, பக்தர்கள் சிரமமின்றி வசதியாக சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


தற்சமயம் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக கோவிலின் உட்புறத்தில் முக்கிய இடங்களில் 125 CCTV கேமராக்களும், கோவிலை சுற்றி வெளிபுறத்தில் 110 CCTV கேமராக்களும், வாகனங்கள் நிறுத்துமிடங்களில் 10 CCTV கேமராக்கள் என மொத்தம் 245 கேமராக்கள் பொருத்தப்பட்டு அதை புறக்காவல் நிலையத்திலிருந்து கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முக்கிய வீதிகளின் சந்திப்புகளில் கண்காணிப்பு உயர்கோபுரங்கள் அமைக்கப்பட்டு காவலர்களுக்கு பைனாக்குலர் வழங்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் பொது அறிவிப்பு ஒலிபெருக்கி (P.A.System) அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு அவ்வப்போது அறிவிப்பு செய்து தகவல் தெரிவிக்க முன்னேற்ப்பாடுகள் செய்யப்பட உள்ளது.

மேலும் வைகுண்ட ஏகாதசி பரமபத வாசல் திறப்பின்போது போக்குவரத்து நெரிசலின்றி பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்ல போக்குவரத்து காவல் ஆளிநர்கள் போதிய அளவில் பணி நியமிக்கப்பட்டு, போக்குவரத்தை சீராக இயங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் இந்த வருடம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது இரண்டு/நான்கு சக்கர வாகனங்களை உத்திர வீதியில் நிறுத்த அனுமதியில்லை. தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் தங்கள் வாகனங்கள் நிறுத்துவதற்கு (Parking Area) 1.யாத்திரி நிவாஸ் எதிர்புறம் கொள்ளிடக்கரை 2.மூலத்தோப்பு 3.சிங்கபெருமாள் கோவில் மைதானம் 4.ஸ்ரீமத் ஆண்டவர் கல்லுாரி மைதானம் 5. தெப்பகுளத்தை சுற்றியும் 4 புறங்களில் மற்றும் 6.

நெடுந்தெரு மந்தை ஆகிய இடங்களில் தங்கள் வாகனங்களை நிறுத்த அறிவுறுத்தப்படுகிறது. மேலும் முக்கிய பிரமுகர்கள் (VIP & Car Pass Holder) தென்மேற்கு மற்றும் வடமேற்கு சித்திரை வீதிகளில் உள்ள வாகனங்கள் நிறுத்துவதற்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் தங்களது வாகனங்கள் நிறுத்த வேண்டும். மேலும் மூலத்தோப்பு தெப்பகுளம் அருகில் பணிக்கு வரும் காவலர்கள் தங்களின் இருசக்கர வாகனங்கள் நிறுத்த வேண்டும் எனவும், 24 மணிநேரமும் சுழற்சி முறையில் காவல் ஆளிநர்கள் பணியமர்த்தப்பட்டு தீவிர

கண்காணிப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட உள்ளதாக திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் தெரிவித்தார்கள்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *