அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு
திருவெறும்பூர் ரயிலடி அருள்மிகு ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் திருக்கோவிலில் அனுமான் ஜெயந்தி முன்னிட்டு அனுமான் ஜெயந்தி விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது காலையில் உலக மக்கள் நலம் வேண்டி சுதர்சன ஹோமம் அதனைத் தொடர்ந்து

உற்சவமூர்த்தி, மூலவருக்கு 108 லிட்டர் பால், மஞ்சள் பொடி திரவிய பொடி சந்தனம் இளநீர் தயிர் 16 வகையான அபிஷேகம் நடைபெற்றது 208 கிலோ எடை கொண்ட பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டது 508 லட்டு,508 ஜாங்கிரி, 108 பாதுஷா,108 அல்வா, 108 மைசூர் பாகு, இனிப்பு வகைகள் அனுமனுக்கு மிகவும் பிடித்தமான வடையால்10008 வடை தயாரித்து பக்த ஆஞ்சநேயருக்கு படைத்து மகா தீபாரதனை காமிக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து மகா பிரசாதத்துடன் இனிப்புகள்,வடை, சேர்த்து பொது மக்களுக்கு

வழங்கப்பட்டது வண்ண பூக்களாலும் பழங்களாலும் அலங்கரிக்கப்பட்ட ஆஞ்சநேயர் தங்க கவச அலங்காரத்தில் பொதுமக்களுக்கு காட்சியளித்தார் தராத பக்தர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர் இந்த விழாவினை அருள்மிகு ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் சேவா சங்கம் மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்தினர்

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments