Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

தமிழக காவல் உதவி ஆய்வாளர் தேர்வு: திருச்சி மாவட்டத்தில் 4 மையங்கள் ஒதுக்கீடு – எஸ்.பி. முக்கிய அறிவுறுத்தல்!

திருச்சிராப்பள்ளி:
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தும் காவல் உதவி ஆய்வாளர் (Sub-Inspector) பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு வரும் டிசம்பர் 21 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற உள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள 1299 காலிப்பணியிடங்கள் மற்றும் 53 பின்னடைவு காலிப்பணியிடங்களுக்கான (Shortfall vacancies) இந்தத் தேர்வு, திருச்சி மாவட்டத்தில் நான்கு முக்கிய மையங்களில் நடைபெறவுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் விண்ணப்பித்துள்ள தேர்வர்களுக்காக பின்வரும் கல்வி நிறுவனங்கள் தேர்வு மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன:
எஸ்.ஆர்.எம் (SRM) அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்,எம்.ஏ.எம் (M.A.M) பொறியியல் கல்லூரி,தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம்,சமயபுரம், கே.ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி.

தேர்வு எழுத வரும் விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட அறிவுறுத்தல்களைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்:
தேர்வர்கள் தங்களது நுழைவுச்சீட்டு (Hall Ticket) மற்றும் அசல் அடையாள அட்டை (Original ID Proof) ஆகியவற்றை அவசியம் கொண்டு வர வேண்டும். அசல் அட்டை இல்லாதவர்கள், அதன் நகலில் அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரியிடம் (Gazetted Officer)

சான்றொப்பம் பெற்று வர வேண்டும். நகல் மட்டும் கொண்டு வருபவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
எழுத்துத் தேர்விற்கு கருப்பு நிற பால்பாயிண்ட் பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
செல்போன், ஸ்மார்ட் வாட்ச், புளூடூத் கருவிகள், கால்குலேட்டர், பென்சில் மற்றும் ரப்பர் ஆகியவற்றை தேர்வு அறைக்குள் கொண்டு வர அனுமதி இல்லை.

தேர்வு நாளன்று காலை 08.00 மணி முதல் 09.30 மணி வரை மட்டுமே விண்ணப்பதாரர்கள் மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். 09.30 மணிக்கு மேல் வருபவர்களுக்கு அனுமதி மறுக்கப்படும்.

நுழைவுச்சீட்டு (Hall Ticket) அல்லது தேர்வு தொடர்பான சந்தேகங்கள் இருப்பின், தேர்வர்கள் உடனடியாக மாவட்ட காவல் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம். இதற்காக 89391 46100 என்ற உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.


நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தேர்வர்கள் அமைதியான முறையில் தேர்வு எழுத ஒத்துழைப்பு நல்குமாறும் காவல்துறை தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *