திருச்சிராப்பள்ளி மாவட்டம், தொட்டியம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமியிடம் அவரின் தந்தையே இரவு நேரத்தில் தூங்கும்போது பாலியல் தாக்குதலுக்கு உட்படுத்தியதாகவும் மேலும், இந்த விசயத்தை வெளியே யாரிடமும் செல்ல கூடாது என்று கூறி அந்த சிறுமியிடம் பலமுறை பாலியல் தாக்குதலுக்கு உட்படுத்தியதாக திருச்சி மாவட்ட குழந்தைகள் நல மைய மேற்பார்வையாளர் கொடுத்த புகாரின் பேரில் முசிறி அனைத்து மகளிர் காவல் நிலைய குற்ற எண். 49/25, U/ 5(m), 5(n), 5(i) r/w 6 (1) of POCSO ACT ன் படி 27.11.2025 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டு, அன்றைய தினமே எதிரி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.
இந்நிலையில் மேற்படி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வரும் குற்றவாளி மீது தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அடைக்க திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம், அவர்களின் பரிந்துரையின் பேரில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டு இன்று (25.12.2025) சிறையில் உள்ள எதிரியிடம் சார்வு செய்யப்பட்டது என்பதை
தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
மேலும் திருச்சி மாவட்டத்தில் ஜனவரி-2025 முதல் தற்போதுவரை மொத்தம் 16 தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டு சம்மந்தப்பட்ட எதிரிகளிடம் சார்வு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments