திருச்சி தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் வேளாண்மை அறிவியல் பள்ளி மற்றும் திருச்சி ‘பார்ம் நெக்ஸஸ் டெக்’ நிறுவனம் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்திடும் விழா மற்றும் தொழில்முனைவோர் மன்றத் தொடக்க விழா கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழக முதல்வர் க. சோழன் தலைமை தாங்கி, தொழில்முனைவோர் மன்றத்தைத் தொடங்கி வைத்தார். பல்கலைக்கழக வேந்தர் அ. சீனிவாசன் தலைமை புரவலராகவும், இணை வேந்தர் அனந்தலட்சுமி கதிரவன் புரவலராகவும் பங்கேற்றனர். மேலும், துணைவேந்தர் சி.கே. ரஞ்சன் மற்றும் பதிவாளர் சு. செல்வகுமார் ஆகியோர் ஆலோசகர்களாகக் கலந்து கொண்டனர். பார்ம் நெக்ஸஸ் டெக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அசித் தேவானந்த் ஆறுமுகம் விழாவில் முன்னிலை வகித்தார்.

விழாவில் சுழி வில்லேஜ் நிறுவனர் ஆனந்தபிரபு ராஜேந்திரன், திருச்சி தோட்டக்கலை துணை இயக்குநர் எஸ். சரண்யா, கேரியர் டிசைனிங் சொல்யூஷன் இயக்குநர் டி. நல்லுசாமி மற்றும் இங்கிலாந்து புரோபிரான்டட் லிமிடெட் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஆனந்த் கணேஷ் ஆகியோர் பல்வேறு வேளாண் மற்றும் தொழில் சார்ந்த தலைப்புகளில் உரையாற்றினர்.
தொடர்ந்து, பார்ம் நெக்ஸஸ் டெக் நிறுவனத்தின் தலைமை வேளாண் நிபுணரும், பாலிஹவுஸ் சாகுபடியில் தனது வேளாண் நுட்பத்தின் மூலம் குறிப்பிடத்தக்க மகசூல் சாதனைகளை உருவாக்கிய முன்னணி அக்ரோனமிஸ்ட்டுமான எம். நாராயணன், நவீன வேளாண் தொழில்நுட்பங்கள், துல்லிய பண்ணையம் மற்றும் பாலிஹவுஸ் உற்பத்தி மேலாண்மை குறித்த தனது அனுபவங்களை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

நிறுவனத்தின் ஆப்ரேஷனல் இயக்குனர்கள் எம். பாரத் குமார் மற்றும் கே. அஜித் குமார் ஆகியோர் புதிய தொழில்முனைவு மன்றத்தின் செயல்பாடுகளுக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
பார்ம் நெக்ஸஸ் டெக் நிர்வாக இயக்குநர் அசித் தேவானந்த் ஆறுமுகம் பல்கலைக்கழகத்துடன் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கங்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசியதாவது:

மாணவர்களின் புதுமையான யோசனைகள் மற்றும் கண்டுபிடிப்புகளுக்குத் தொழில்நுட்ப வழிகாட்டுதல் மற்றும் நிதியுதவி வழங்க பார்ம் நெக்ஸஸ் டெக் நிறுவனம் தயாராக உள்ளது. இதில் துல்லிய பண்ணையம் சார்ந்த ஆராய்ச்சி மாணவர்களுக்கு நிதி வழங்கும் திட்டமும் அடங்கும்.
எங்கள் நிறுவனம், அரசு மானிய உதவியுடன் நவீன வேளாண் தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு அமைத்தல், தரமான விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லி மேலாண்மை, தொழில்நுட்ப ஆலோசனை, சந்தைப்படுத்தல் மற்றும் பை பேக் வசதி உள்ளிட்ட முழுமையான ஆதரவை வழங்கி வருகிறது. இதன் மூலம் ஒரு ஏக்கருக்கு ஆண்டுக்கு ரூ.25 லட்சம் வரை வருவாய் ஈட்டும் வேளாண் மாடலை விவசாயிகளிடம் வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறோம்,” என்று தெரிவித்தார்.

இவ்விழாவை வேளாண்மை அறிவியல் பள்ளியின் உதவி பேராசிரியர்கள் பா. ஐஸ்வர்யா மற்றும் த.மு. காமேஷ் ஆகியோர் சிறப்பாக ஒருங்கிணைத்தனர். இதில் திரளான மாணவர்கள், பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்முனைவோர் ஆர்வலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments