தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 18-வது திருச்சி மாவட்ட மாநாடு மாவட்டத் தலைவர் ஜான்சன் பிரான்சிஸ் தலைமையில் தி இன்ஸ்டிடியூஷன் ஆஃப் இன்ஜினியர்ஸ் அரங்கில் 28.12.2025 அன்று நடைபெற்றது. முதலில், மாவட்ட இணைச் செயலாளர் க.பகுத்தறிவன் அனைவரையும் வரவேற்று பேசினார். மாவட்டச் செயலாளர் மு.மணிகண்டன் அறிமுகவுரை ஆற்றினார். காலை அமர்வில், கருத்தரங்கம் பாராட்டு மற்றும் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

அறிவியலை அறிவோம், அறிவியலால் இணைவோம் என்ற தலைப்பில் துவாக்குடி அரசு கல்லூரி மக்கள் நிர்வாகக்துறை தலைவர் பேரா.அப்துல் சலாம் கருத்துரை வழங்கி மாநாட்டை தொடங்கி வைத்தார். ஒன்றியத்திற்கு நான்கு ஆசிரியர்கள் என பள்ளி அளவில் சிறப்பான முறையில் அறிவியல் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழும், கேடயமும் வழங்கப்பட்டது. சிறப்ப விருந்தினர்களாக திருவெறும்பூர் ஒன்றிய வட்டாரக் கல்வி அலுவலர் க.மருதநாயகம், லைஃஜோன் ஆப் பெல் திருச்சி நிறுவனர் மற்றும் பொதுச் செயலாளர் பூபாலன்,

இலால்குடி எஸ்.பி.ஐ வங்கி சுபாஷ்சந்திரன், பதக்கரமுத்து, ஆசிரியர் சித்ராதேவி ஆகியோர் கலந்துகொண்டு பாராட்டுரை வழங்கினார்கள். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாநிலச் செயலாளர் மு.மாணிக்கத்தாய், மாநில செயற்குழு உறுப்பினர் க.உஷாநந்தினி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.
மதியம் நடைபெற்ற பிரதிநிதிகள் அமர்வில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 1.திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையை மக்கள்தொகை பெருக்கத்திற்கு ஏற்ப மருத்துவ பணியாளர்கள் மற்றும் உள் கட்டமைப்பு வசதிகளுடன் மேம்படுத்த வேண்டும். 2.அரசு மாதிரி பள்ளிகளைப் போன்று நவீன வசதிகளுடன் கிராம, நகர்ப்புற அரசு பள்ளிகளையும் தரம் உயர்த்தி மாணவர்கள் பயிலும் வண்ணம் மாற்றுதல் வேண்டும்

புதிய மாவட்டத் தலைவராக ஜான்சன் பிரான்சிஸ், செயலாளராக பேரா.அருண்விவேக், பொருளாளராக ச.மாரிமுத்து, துணைத் தலைவர்களாக மு.மாணிக்கத்தாய், பேரா.சலாஹூதீன், ரா.சந்திரா, து.காந்தி, திருமாவளவன், இளங்கோ, இணைச் செயலாளர்களாக பேரா.ஜானி குமார் தாகூர், ஆ.யோகலட்சுமி, பேரா.ரிபாயத் அலி, ஸ்ரீதரன், புவனேஸ்வரி, மகாலட்சுமி உள்ளிட்ட 55 பேர் கொண்ட செயற்குழு உறுப்பினர்கள் உள்ளடங்கி 135

பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாநிலச் செயலாளர் எம்.எஸ்.ஸ்டீபன் நாதன் நிறைவுரை ஆற்றினார். நிறைவாக மாவட்ட செயற்குழு உறுப்பினர் ச.பாலுசாமி நன்றி கூறினார். மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், கிளை பிரதிநிதிகள், சிறப்பு அழைப்பாளர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments