மேகதாது அணை கட்டும் முயற்சிக்கு எதிராக, தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம் சார்பில், லால்குடி சந்தை கடை பகுதியில் இருந்து விவசாயிகள் கையில் திருவோடு ஏந்தி ஊர்வலமாக வந்து, லால்குடி ரவுண்டானாவில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது என்றும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனவரி 20ஆம் தேதி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தினர். அத்தகைய தீர்மானம் நிறைவேற்றப்படாவிட்டால் சென்னையில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என எச்சரித்தனர்.
மேலும், விரைவில் திருச்சிக்கு வரவிருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரதமர் மோடியிடம் மேகதாது அணை கட்டுவதற்கான அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்த வேண்டும் என்றும், அவ்வாறு செய்யாவிட்டால் அமித் ஷா வருகையின் போது திருச்சியில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்றும் விவசாயிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
இந்த போராட்டத்தில் நியாயமான ஆதார விலை, தடுப்பணை, இலவச மின் இணைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளையும் வலியுறுத்தினர். சங்கத்தின் மாநிலத் தலைவர் பூ. விஸ்வநாதன் தலைமையில் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments