ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ திருச்சியில் இருந்து மதுரைக்கு சமத்துவ நடைபயணம் மேற்கொள்கிறார். அவரது நடைபயணத்தின் தொடக்க விழா நிகழ்ச்சி நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணி அளவில் திருச்சி தென்னூர் அண்ணாநகர் உழவர் சந்தை அருகில் உள்ள மாநகராட்சி திடலில் நடைபெற உள்ளது.

முதல் -அமைச்சர் மு.க. ஸ்டாலின் நடைபயணத்தை தொடங்கி வைத்து பேசுகிறார். விழா மேடை அமைப்பு மற்றும் நடைபயண ஏற்பாடு பணிகளை ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ எம்.பி. நேற்று ஆய்வு செய்தார். இதில் ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் டாக்டர் ரொகையா, ம.தி.மு.க. உயர்நிலை குழு உறுப்பினர் ஜீவன், மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ் மாணிக்கம் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments