திருச்சி தில்லை நகரில் உள்ள மல்லிகா பர்னிச்சர் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கும் கடையில்
பொதுமக்கள் விடுமுறை தினம் என்பதால் தங்கள் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு சென்றுள்ளனர். கடையில் மேல் தளத்திலிருந்து கீழே வருவதற்கு ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏழு பேர் லிப்டில் பயணம் செய்துள்ளனர். லிஃப்ட் பழுதாகி இடையில் நின்றுள்ளது. சுமார் ஒரு மணி நேரம் லிப்டுக்குள் தவித்து வந்த அவர்களை கடையின் நிர்வாகம் மீட்க முடியாமல் திணறியது.

உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது தீயணைப்புத்துறையினர் வரும் பொழுது லிப்டின் சாவியை வேறொரு இடத்தில் இருந்து எடுத்து வந்து ஏழு பேரையும் மீட்டு உள்ளனர். குழந்தைகள் உள்ளே கதறி பதட்டத்தில் அழுதுள்ளனர். தீயணைப்பு துறை அதிகாரிகள் இது தொடர்பாக இவர்கள் முறையாக லிப்டை பராமரிக்கவில்லை என்று புகார் எழுதி வைத்துள்ளனர். சுமார் ஒரு மணி நேரம் வீட்டுக்குள் பெண்கள் குழந்தைகள் என அனைவரும் சிக்கியதால் மற்ற வாடிக்கையாளர்களும் பதற்றம் அடைந்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments