திருச்சி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில், பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணி சமீபத்தில் நடைபெற்றது. கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனாகச் செலுத்திய காணிக்கை மூலம் மொத்தம் 91 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம்

வசூலாகியுள்ளது. பணத்தைத் தவிர, 1 கிலோ 942 கிராம் தங்கம் மற்றும் 3 கிலோ 280 கிராம் வெள்ளி ஆகியவையும் காணிக்கையாகக் கிடைத்துள்ளன. மேலும், அமெரிக்கா, சிங்கப்பூர் மற்றும் மலேசியா போன்ற பல்வேறு வெளிநாடுகளின் கரன்சி நோட்டுகளும் உண்டியலில் கண்டெடுக்கப்பட்டன. இந்த காணிக்கை எண்ணும் பணியானது கோயில் அதிகாரிகளின் முன்னிலையில், வங்கி ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்களின் உதவியுடன் சிசிடிவி கண்காணிப்பிற்கு மத்தியில் பாதுகாப்பாக நடைபெற்றது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments