கழகப் பொதுச் செயலாளர், வருங்கால முதல்வர், புரட்சித்தமிழர் அண்ணன் எடப்பாடியார் அவர்களின் மேலான ஆணைக்கிணங்க…
இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசியல் ஆசான், கழக நிறுவனத் தலைவர், இதய தெய்வம், மக்கள் திலகம், பாரதரத்னா, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 109-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு,
திருவெறும்பூர், BHEL அண்ணா தொழிற்சங்க வளாகத்தில் உள்ள புரட்சித்தலைவரின் திருவுருவ சிலைக்கு..
17.01.2026 சனிக்கிழமை காலை 10.35 மணியளவில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது.
மேலும் கழகத்தினர் தங்கள் பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் திருவுருவச் சிலை, மற்றும் திருவுருவ படங்களுக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி,
ஏழை எளியோருக்கு இனிப்பு வழங்கி, அன்னதானம் வழங்கி, அனைத்துப் பகுதிகளிலும் ஒலிபெருக்கிகள் மூலம் எம்ஜிஆர் பாடல்களை நாள் முழுவதும் ஒலிக்க செய்து, மிக சிறப்பாக கொண்டாட வேண்டும் எனவும்,
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில், வரும் 18.1.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 6.00 மணியளவில், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின்
109 – ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், லால்குடி சட்டமன்ற தொகுதி, புள்ளம்பாடியில்,
நடைபெற உள்ளது.
மேற்கண்ட இரு நிகழ்ச்சிகளிலும் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூராட்சி, வட்ட, கிளை,
வார்டு கழக நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் செயல்வீரர்கள், வீராங்கனைகள், மற்றும் பொதுமக்கள் அனைவரும் பெரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறினார் ப.குமார் BSc., BL. Ex.MP, மாவட்ட கழக செயலாளர், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அஇஅதிமுக அவர்கள்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments