முசிறியில் செயல்பட்டு வந்த ஸ்ரீ ஆதி சிவன் சிட்ஸ் பிரைவேட் நிறுவனம் மூடப்பட்டு ஐந்து கோடிக்கு மேல் மோசடி..ஓரு லட்சம் முதல் 1 கோடி வரை பணம்செலுத்தியவர்கள் இன்று அலுவலகத்திற்கு சென்ற பொழுது பூட்டி இருந்ததால் அதிர்ச்சி,

திருச்சி மாவட்டம், முசிறியில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்த ஸ்ரீ ஆதி சிவன் சிட்ஸ் பிரைவேட் லிமிடெட்டில் செயல்பட்டு வந்துள்ளது, இந்நிறுவனத்தில் முசிறி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 450 க்கும் மேற்பட்டோர் ஒரு லட்சம் முதல் ஒரு கோடி வரை சீட்டு பணம் கட்டியும், ஏலச்சீட்டு எடுத்தும் வந்ததாக கூறுகின்றனர், இதில் 150 க்கும் மேற்பட்டோர் சீட்டு பணம் எடுத்ததாக கூறப்படுகிறது, ஒரு லட்சம், இரண்டு லட்சம் சீட்டு முடிந்தவர்கள் பணம் பெறுவதற்காக இன்று சிட்பண்ட்ஸ்ற்கு வந்துஜபார்த்த பொழுது பூட்டி கிடந்ததால் பணம்செலுத்தியவர்கள
அதிர்ச்சியடைந்துள்ளனர், தொடர்ந்து 300-க்கும் மேற்பட்டோருக்கு சுமார் ஐந்து கோடிக்கு மேல்சுருட்டிசென்றதாககுற்றச்சாட்டுகின்றர்,பணம் செலுத்தியவர்கள் முசிறி பகுதிகளில் சிறு விவசாயிகள் மற்றும் மிகவும் சிரமப்படுபவர்கள் சேமித்தால் இதனைக் கொண்டு பல்வேறு நிலைகளில் பயன்படுத்தி கொள்ளலாம் என எண்ணத்துடன் சீட்டு பணம் செலுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது,

இதுகுறித்து பாதிக்கப்பட்டோர் சுமார் 15 ற்கும் மேற்பட்டவர்கள் முசிறி காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்ற பொழுது, பல கோடிக்கு மேல் மோசடி ஏற்பட்டுள்ளதால் இது தொடர்பாக புகாரை திருச்சி பொருளாதார குற்றப்பிரிவினரிடம் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர், பணம் செலுத்தி பாதிக்கப்பட்டவர்கள் பெரும் சோகத்தில் சென்றனர், தமிழ்நாடு அரசு எங்களின் நிலை அறிந்து உடனடியாக பணத்தை மீட்டு தர கோரிக்கை வைத்தனர்,

முசிறி, துறையூர், துவரங்குறிச்சி, வையம்பட்டி, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இந்நிறுவனம் செயல்பட்டதாக தகவல்..

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments