Site Logo mobile
Search Icon
Mobile Gif
Lifestyle

திருச்சியில் முதல்வர் ஜோசப் விஜய் பிறந்தநாள் நிகழ்சி – சட்டபேரவை குறித்து ரவிசங்கர் கருத்து

முதல்வர் பேசும் போது முறையாக சபாநாயகரின் அனுமதி கேட்ட பிறகு தான் சைகை செய்தார். எதிர் புறத்தில் பேசுபவர்கள் ஒரு சிலர் ஒருமையில், கெட்ட வார்த்தையில் பேசினார்கள் – துணை சபாநாயகர் ரவிசங்கர் பேட்டி.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான ஜோசப் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சி மாவட்ட தமிழக வெற்றிக்கழகம் சார்பில் பாலக்கரை பகுதியில் சிறப்பு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. திருச்சி மாவட்ட முன்னாள் தலைவர் ஆர்.கே. ராஜா ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு சட்டமன்ற துணை சபாநாயகர் ரவிசங்கர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியதுடன், அன்னதானத்தையும் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சிப் பொறுப்பாளர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த துணை சபாநாயகர் ரவிசங்கர்:–

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், சட்டபேரவையில் விமர்சனம் வைத்துவிட்டு. டிவி பார்க்க சென்றுவிட்டார். முதல்வர் பேசும் போது முறையாக சபாநாயகரின் அனுமதி கேட்ட பிறகு தான் சைகை செய்தார். எதிர் புறத்தில் பேசுபவர்கள் ஒரு சிலர் ஒருமையில், கெட்ட வார்த்தையில் பேசினார்கள். அதை தான் சபாநாயகர் கண்டித்தார்.

சட்டபேரவையில் முதல்வர் பேசியது விமர்சனம் செய்யபடுகிறது என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், அனைவரும் பாராட்டினார்கள். எந்த வகையில் விமர்சனம் வந்தது. முதல்வர் நடிகராகவும், சபாநாயகர் இயக்குனராகவும் காணப்பட்டார்கள் என உதயநிதி ஸ்டாலின் சொல்லி இருக்கிறார்?

அதை பார்த்து பார்த்து படிச்சாரே, கீழே பார்த்து படிச்சாரே அதை சொல்லுறீங்களா என்றார். முதல்வர் பேசும் போதே சட்டபேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்கள் இதை எப்படி பார்கிறீர்கள் என்ற கேள்விக்கு… பதில் அளித்த அவர்.. உங்களை போல தான் நானும் பார்க்கிறேன்.. அவர்களை நம்பி ஓட்டு போட்ட மக்கள் தான் சிந்திக்க வேண்டும் என்றார்

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண

Facebook

https://www.facebook.com/share/15fQCjhASKm/

Instagram

https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==

Telegram

https://t.me/trichyvision

Threads

https://www.threads.net/@trichy_vision

Twitter

https://x.com/VisionTrichy

Youtube

https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *