காங்கிரஸ் மாநிலத் தலைவர் மற்றும் மாவட்ட தலைவர் பதவியில் உள்ளவர்கள் வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை தலைமை கொடுக்கக் கூடாது ஏனென்றால் தொங்கு சட்டமன்றம் அமைய வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. பீகார் போல் வெற்றி பெறும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சித் தாவும் நடவடிக்கையில் ஈடுபடாத வகையில் உண்மையான காங்கிரஸ் தொண்டர்களுக்கு வாய்ப்பளிக்க ராகுல் காந்திக்கு அனுப்பப்பட்ட மெயிலில் குறிப்பிட்டுள்ளனர்.
திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே உள்ள காந்தி சிலைக்கு காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சரவணன் தலைமையில் காங்கிரஸ் தொண்டர்கள் காந்தி சிலை முன் மெயில் நகலை வைத்து ஆசீர் பெற்றனர்.
வணக்கம் அன்பு தலைவர் ராகுல் காந்திக்கு மிகவும் தாழ்மையான கோரிக்கை என்னவென்றால்
வருகின்ற 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட வேட்பாளரை தேர்வு செய்யும் போது மிகவும் கவனமாகவும் நமது கட்சியின் தீவிர பாரம்பரிய காங்கிரஸ் காரர்களை வேட்பாளராக தேர்வு செய்ய வேண்டும் ஏனென்றால் வருகின்ற தமிழக சட்டமன்றத் தேர்தல் தொங்கு சட்டமன்றமாக இருக்க வாய்ப்புள்ளது ஆகையால் பீகாரை போல் கட்சி மாறி சென்றவர்கள் போல் ஆகக்கூடாது
அதனால் நமது காங்கிரஸ் பாரம்பரியமிக்க நீண்ட நாட்களாக கட்சிக்கு பணியாற்றிய நபர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்
அப்பொழுது தான் கட்சி மாற மாட்டார்கள் ஆகையால் பல கட்சி சென்று வந்தவர்கள் குறிப்பாக அஇஅதிமுக, பாஜக ஆகியவற்றில் பயணம் செய்து இங்கு வந்தவர்களுக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பு கொடுக்கக் கூடாது அவர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் மாற்றுக் கட்சிக்கு விலை போய் விடுவார்கள் என்பதை உண்மை காங்கிரஸ் தொண்டர்களின் கருத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதுபோல் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பரிந்துரைப்படி வருகின்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் மாநிலத் தலைவர், மாவட்ட தலைவர்கள் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கக்கூடாது ஏனென்றால் கட்சி வேலைகளை அவர்கள் செய்ய வேண்டும்
அதாவது ஏற்கனவே நமது காரிய கமிட்டியில் எடுக்கப்பட்ட முடியின் படி தமிழ்நாட்டில் அந்த திட்டத்தை கடுமையாக அமல்படுத்த வேண்டும் அப்பொழுதுதான் கட்சி நன்கு வளரும் என்பதை தங்கள் கவனத்திற்கு தொண்டர்களின் உணர்வை தெரிவித்துக் கொள்கிறேன்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments