திருச்சி மாவட்ட ஆட்சியராக இருந்த வே. சரவணன், இ.ஆ.ப. தருமபுரி மாவட்ட ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், தமிழக நிதித்துறை இணை செயலாளராக பணியாற்றி வந்த பிரத்திக் தயாள், இ.ஆ.ப. ( Prithik Tayal, IAS) திருச்சி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு புதிய ஆட்சியர் பிரதீக் தயாள் பேட்டி வரலாற்றுச் சிறப்புமிக்க திருச்சி மாவட்டத்தின் ஆட்சியராகப் பொறுப்பேற்றுள்ளேன்.திருச்சி மாவட்டம் முழுவதும் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொடுப்பது, தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்திக் கொடுப்பது, மாவட்டத்தின் வளர்ச்சிக்கு நேர்மையான, திறமையான நிர்வாகத்தைக் கொடுப்பது என்பன எனது நோக்கங்களாகும். வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு முன்னுரிமை வழங்கி, திருச்சி மாவட்டத்தை அடுத்த கட்டத்திற்குத் கொண்டு செல்வேன்” என்றார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments