தஞ்சையில் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு திருச்சி வழியாக சென்னை புறப்பட்ட அதிமுக பொதுச் செயலாளர்,முன்னாள் முதலமைச்சர் எடபாடி பழனிச்சாமி திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் …
குரூப் 2 தேர்வு சென்னையில் ஏற்பட்ட ஹால் டிக்கெட் மற்றும் தேர்வு மையம் குளறுபடியால் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளனர்.
ஒத்திவைக்கப்பட்டது கூட தெரியாமல் பல்வேறு மாவட்டங்களில் தேர்வை எழுதியுள்ளனர் நிர்வாக திறமையற்ற அரசாங்கமாக திமுக அரசு உள்ளது.
ஒரு முக்கியமான தீர்வை சரியான முறையில் நடத்தக்கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்ட ஒழுங்குக்கு நிரந்தர டிஜிபி இன்னும் நியமிக்கப்படவில்லை..
சமீபத்தில் உச்ச நீதிமன்றம் கூட ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது UPSC மூலம் தேர்வு செய்யப்பட்டு மாநில அரசுக்கு அனுப்பப்பட்ட பட்டியலில் இருந்து உரிய காலத்தில் சட்ட ஒழுங்கு டிஜிபியை நியமிக்கப்படாமல் இருந்தால் உச்சநீதிமன்றத்தை நாடலாம் என்று செய்தி வெளிவந்துள்ளது..
உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் கூட இந்த அரசு சட்ட ஒழுங்கு டிஜிபி நியமனம் செய்யாமல் இருக்கின்றன.
அந்த அளவிற்கு திறமை ஏற்ற அரசாங்கம் செயல்பட்டு வருகிறது.
டிஎன்பிஎஸ்சி தேர்வு ஒத்திவைக்கப்பட்டதற்கு கே என் நேரு ஊழல் காரணமா?
டிஎன்பிஎஸ்சி நிர்வாக திறந்தான் காரணம்…
உதவி ஆய்வாளர் தேர்வு கூட இதேபோன்றுதான் முறைகேடு நடந்த அதில் குளறுபடி ஏற்பட்டது.
அதற்கு புகார் கொடுத்து கூட எவ்வித நடவடிக்கையும் இந்த அரசு எடுக்கவில்லை.
இதற்கு முழுமையாக அரசாங்கம் தான் பொறுப்பேற்க வேண்டும்..
திராவிடம் மாடல் 2.0 ஹீரோ இல்லை ஜீரோ தான் அவர்களுக்கு கிடைக்கப் போகிறது.
அண்ணா திமுக ஆட்சிக்காலத்தில் நிறைய திட்டங்களை மத்திய அரசிடமிருந்து பெற்றோம். இந்த ஆட்சியாளர்கள் முறையாக அணுகாததால், அதன் காரணமாக மாநில அரசுக்கு வரவேண்டிய திட்டங்கள் அனைத்தும் கைநழுவிப் போய்க் கொண்டிருக்கின்றன. இந்த காரணமே ஸ்டாலின் தலைமையிலான அரசுதான்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments