Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

மேம்பாலம் கோரி மணப்பாறையில் மாணவர்கள் சாலை மறியல்

மணப்பாறை அருகே கே.பெரியபட்டி பிரிவு சாலையில் திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி பள்ளி மாணவ – மாணவிகள் பொதுமக்கள் போராட்டம்.போக்குவரத்து முடங்கியதால் மக்கள் கடும் அவதி.

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த கே.பெரியபட்டி பிரிவு சாலை அருகே திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் மையப்பகுதியில் பாதை உள்ளது. இந்தப் பாதையை கடந்து தான் கே.பெரியப்பட்டி சொக்கம்பட்டி, உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சென்று வந்தனர்.

மேலும்சிப்காட்தொழிற்பேட்டைக்குசெல்லும் வாகனங்கள் மற்றும் பணியாளர்களும் இந்த வழியையே பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் அந்த இடத்தில் தொடர்ந்து விபத்து நடைபெறுவதாக கூறி பாதை அடைக்கப்பட்டு விட்டது. மேம்பாலம் அமைக்கும் வரை அந்தப் பாதையை திறந்து விட வேண்டும், மேம்பாலம் அமைப்பதற்கு உடனடியாக நடவடிக்கை வேண்டும் என்று வலியுறுத்தி பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் நூற்றுக்கணக்கான மக்கள் சம்பந்தப்பட்ட இடத்தில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படாத நிலையில் மறியல் போராட்டம் தொடர்ந்து வருவதால் திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முடங்கி சுமார் ஒரு ஒன்றரை கிலோ மீட்டருக்கு மேல் சாலையின் இரு புறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் தமிழமணி, மணப்பாறை வட்டாட்சியர் சுந்தர பாண்டியன் மற்றும் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் பாதையை ஏற்படுத்தி கொடுத்தால் மட்டுமே மறியலை கைவிடுவோம் என்று கூறி தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதனால் சாலையில் சுமார் 3 கிலோ மீட்டருக்கு மேல் வாகனங்கள் அனைவகுத்து நின்றது. உடனடியாக தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததோடு பாதை அமைப்பதற்கான பணியை தொடங்கியதால் மக்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடத்தி வந்த மறியலை கைவிட்டனர். இந்த மறியல் போராட்டத்தால் பள்ளி கல்லூரி மற்றும் பல்வேறு பணிகளுக்கு செல்வோர் செல்ல முடியாமல் கடும் வேதனைக்கு ஆளாகினர்.

 

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண

Facebook

https://www.facebook.com/share/15fQCjhASKm/

Instagram

https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==

Telegram

https://t.me/trichyvision

Threads

https://www.threads.net/@trichy_vision

Twitter

https://x.com/VisionTrichy

Youtube

https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

 

 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *