Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி: ஆவணமற்ற இருசக்கர வாகனங்கள் பொது ஏலத்தில் விற்பனை

திருச்சி மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் வழக்குபதிவு செய்யப்பட்டு உரிய ஆவணங்கள் இல்லாத TVS 50 -1, Bajaj scooty Sprit-1, TVS XL Super-1, Honda Activa-1, ஆகிய 4 இருசக்கர வாகனங்கள் (Motor Cycles) பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.

வருகின்ற 10.02.2026-ந்தேதி காலை 10:00 மணிக்கு திருச்சி மாநகர மதுவிலக்கு அமல்பிரிவு, பொன்மலை அலுவலக வளாகத்தில் வைத்து பொது ஏலம் நடைபெறுகிறது. மேலும் வாகனங்களை ஏலம் எடுக்க விருப்பமுள்ளவர்கள் ஏலம் நடைபெறும் நாளான வருகின்ற 10.02.2026- ந்தேதி காலை 08:00 மணி முதல் 10:00 மணி வரை தங்களது ஆதார் அட்டையுடன் ரூ.2000/- முன் பணம் செலுத்தி தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளவேண்டும்.

ஏலம் எடுத்த உடன் ஏலத்தொகையுடன், அதற்குரிய சரக்கு மற்றும் சேவை வரியான
பெற்றுக்கொள்ளலாம் GST என
தொகையையும் செலுத்தி வாகனத்தை திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *